Grey to Green எனும் தொழில்நுட்பம்

அசுர வேகத்தில் அதிகரித்துவரும் உலகளாவிய னத்தொகை காரணமாக இடநெருக்கடிகள் ஏற்பட்டவண்ணமே காணப்படுகின்றன. இதன் காரணமாக அனேகமான இடங்கள் நகரமயமாக்கப்படுவதனால் சூழலில் உள்ள பச்சை தாவரங்கள் அழிக்கப்படுகின்றன.


இதன் விளைவாக வளிமண்டலத்தில் ஓக்சிஜன் மற்றும் கார்பன்டை ஆக்ஸைடு வாயுக்களின் சமநிலை பாதிக்கப்படுவதோடு சூழல் வெப்பநிலையும் அதிகரித்து செல்கின்றது. இதனை தவிர்க்கும் முகமாக தற்போது Grey to Green எனும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 அதாவது பச்சை தாவரங்களை வளர்க்கக்கூடிய விசேட டைல்ஸ்களினை (Tiles) Caroline Brahme என்ற பெண்மணி உருவாக்கியுள்ளார். இந்த டைல்ஸ்களில் காணப்படும் துளைகளினுள் உரமூட்டப்பட்ட மணலை நிரப்பி அவற்றுள் தாவரங்களை வளர்க்க முடிவதுடன், நகரப் புறங்களில் அமைக்கப்படும் வீடுகளை சூழ இவ்வகையான டைல்ஸ்களை பதிக்க முடியும்.

 சுமார் 14 அமெரிக்க டொலர்களே பெறுமதியான இவ்வகை டைல்ஸ்கள் மூலம் சூழலை எளிமையாக பாதுகாக்க முடியும் என அப்பெண்மெணி குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv