89 தமிழ் நகரங்களின் பெயர்களை சிங்கள மயமாக்குகிறது இலங்கை அரசு!


இலங்கையை  முற்றிலும் சிங்கள மயமாக்கும் முயற்சிகளை இலங்கை அரசு இரகசியமாக தொடங்கி விட்டது. முதல் கட்டமாக தமிழ்ப் பெயர்களில் உள்ள நகரங்களின் பெயர்களை சிங்களத்தில் மாற்றவுள்ளது. இதற்காக 89 நகரங்களின் பெயர்களைத் தேர்வு செய்துள்ளது
இலங்கை அரசு 
ஈழப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈழத்தை சிங்களவர்கள் கைப்பற்றி முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.

அங்கு குவிக்கப்பட்ட இராணுவத்தினர் இன்னும் போகவில்லை. தமிழர்கள் அனாதைகளாக்கப்பட்டு விட்டனர். அடுத்தவர் கையை ஏந்திப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒன்றுமில்லாமல் போய் விட்ட தமிழர்களை மேலும் கஷ்டப்படுத்தும் வகையில், தமிழ் நகரங்களின் பெயர்களையெல்லாம் சிங்களமயமாக்கும் முயற்சிகளை இலங்கை அரசு தொடங்கியுள்ளது.

முதல் கட்டமாக 89 நகரங்களின் பெயர்களை சிங்களத்தில் மாற்றவுள்ளனராம்.  இது தொடர்பில் கடந்த அக்டோபர் மாதம் இலங்கை அரசானது ஒரு இரகசிய சுற்றறிக்கையை தயாரித்துள்ளது.
இதன் அடிப்படையில் 89 தமிழ் நகரங்களுக்கு சிங்களப் பெயரைச் சூட்ட இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது.

வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டையை பட்டகொட்ட என்றும், பருத்தித்துறையை பேதுருதொடுவ என்றும், நயினாதீவை நாகதீப என்றும், கிளிநொச்சியை கரணிக என்றும், முல்லைத்தீவை மோலடோவா என்றும் மாற்றப்படவுள்ளது தற்போது ஆதாரங்களோடு அம்பலமாகியுள்ளது.
0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv