இப்படியும் சிலர்.......!

அழகாக ஓட்டப்பட்ட
 புன்னகை துண்டுகள்...
தேன் தடவிய
 வார்த்தை நஞ்சுகள்....!
 பொய்களையும் உண்மைகளாக்கும்
 ஏமாற்றுவேலை...
வேஷம் போட்டு
 மோசம் செய்யும்
 வாழ்க்கை நாடகங்கள்....!


தூக்கிவிடுவதாய் சொல்லி
 தூரத்திலிருந்து கைநீட்டி
 தூக்கிலிட்டு கொல்லும் 
நம்பிக்கை துரோகங்கள்....!
உதவி செய்வதாய்
 உத்தரவாதம் தரும்
 உபயோகமில்லாத சத்தியங்கள்....!
நம்பச்சொல்லி நச்சரித்துக்கொண்டே
 வாரி வழங்கப்படும்
 போலி வாக்குறுதிகள்...!
உண்மை அன்பென
 உரக்கக் கத்திவிட்டு
 மறைமுகமாய் மனதை
உடைக்கும் வேஷங்கள்.....!
 கண்ணீரை துடைப்பதாய்
விளக்கம் சொல்லிவிட்டு
 விழியருகே வரும்
 விஷம் தடவிய விரல்கள்...!
நம்பிக்கைக்குரியவராய் மாறி
 நமக்கே தெரியாமல் நம்மை
 ஏமாற்றியபடி சிரித்துகொண்டிருக்கின்றன...
சில முகங்கள்....
முகமூடிக்கு பின்னால்...!                   றொக்ஸி & சுபி

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv