உடல் வெறியால் ஓர் உயிர் இவ் உலகை விட்டகல்ந்தது


டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பலத்த காயமுற்று இருந்த மாணவி 13 நாள் உயிருக்கு போராடி வந்தார், தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடலில் முக்கிய உறுப்புகள், மூளை செயல் இழந்ததை அடுத்து மாணவி உயிரிழந்தார். இந்திய நேரப்படி  சனி அதிகாலை 2.15 மணிக்கு 23வயது மாணவியின் உயிர் பிரிந்தது.  



டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட  மாணவி வைத்தியசாலையில் இறப்பதற்கு முன் அளித்த வாக்குமூல விவரங்கள்.

 அவர் வாக்குமூலத்தில் மாணவி கூறியிருப்பதாவது.

கடந்த 16-ந்தேதி இரவு நான் எனது நண்பருடன் முனிர்கா பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தேன். அப்போது ஒரு பஸ் வந்து எங்கள் அருகே நின்றது. 16 வயது சிறுவன் ஒருவன் (கிளீனர்) படிக்கட்டில் நின்றவாறு எங்களைப் பார்த்து பஸ் பாலம் நோக்கி செல்கிறது ஏறிக்கொள்ளுங்கள் என்றார்.

 உடனே நானும் நண்பரும் பஸ்சில் ஏறிக்கொண்டோம். உள்ளே 6 பேர் இருந்தனர். பஸ் சென்ற சில நிமிடங்களில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. பஸ் வேறு திசையில் செல்வதுபோல் தெரிந்தது. திடீர் என்று பஸ்சில் இருந்த 6 பேரும் பஸ்சின் கதவு மற்றும் ஜன்னல்களை இழுத்து மூடினார்கள். நான் ஏன் கதவை மூடுகிறீர்கள் என்று சத்தம் போட்டேன். அவர்கள் என்னைப் பார்த்து இழிவாகவும், அசிங்கமாகவும் பேசினார்கள்.

 ராத்திரியில் என்ன செய்வார்களோ அதைத்தான் செய்யப்போகிறோம் என்றனர். நிலைமை விபரீதமாவதை அறிந்த என்னுடன் வந்த நண்பர் அவர்களை தட்டிக்கேட்டார். உடனே ஒருவன் (ராம்சிங், கைதான பிரதான குற்றவாளி) இரும்பு கம்பியை எடுத்து வந்து தலையில் அடித்தான். அதேபோல் என்னையும் தாக்கினார்கள். இதில் எனது நண்பர் தலையில் அடிபட்டு ரத்தம் சொட்டச் சொட்ட பஸ்சுக்குள் கீழே மயங்கி விழுந்தார்.

அதன்பிறகு ராம்சிங் வந்து என்னை முதலில் பலாத்காரம் செய்தான். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் ராகுல், அக்சய் என்று பெயர் சொல்லி அழைத்துக் கொண்டனர். ஒவ்வொருவராக என்னை பலாத்காரம் செய்தனர். 6 பேரும் என்னை சீரழித்துவிட்டனர். 30 நிமிடம் வரை அந்த பயங்கரம் நடந்தது. நான் மயக்கம் அடைந்ததும் எங்கள் இருவரையும் வெளியே தூக்கி வீசி விடலாமா? என்று பேசிக் கொண்டனர்.

 முதலில் எனது நண்பரை வெளியே தூக்கி வீச முயன்றனர். அதன் பிறகு முடிவை மாற்றிக்கொண்டனர். பின்னர் சிறித தூரம் போனதும் எங்களை தூக்கி வெளியே வீசி விட்டனர். இவ்வாறு மாணவி கூறினார்.

 கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக 16 வயது சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட சிறுவன்தான் பஸ் நிறுத்தத்தில் மாணவியை பஸ்சில் ஏறிக்கொள்ளுமாறு கூவி அழைத்தவன். சிறுவன் என்பதால் நம்பி மாணவி பஸ்சில் ஏறிவிட்டார். ஆனால் உள்ளே 6 காமுகர்கள் இருப்பது பின்னர்தான் மாணவிக்கு தெரியவந்தது. இதனால் பயங்கரம் அரங்கேறியது.

இம் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமை படுத்தப்பட்டு   இப்போது அவள் இவ் உலகை விட்டும் பிரிந்து விட்டாள்.ஆனால் இது போன்ற சம்பவங்கள் உலகில் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருகின்றன சில சம்பவங்களே நம் காதுகளுக்கு எட்டுகின்றன.மனதையும் காயப்படுத்துகின்றன.இவர்களைப்போல் காமுகர்கள் நிறைந்த இவ்வுலகில் பெண்களின் நிலை என்ன?


இவ் இந்திய மாணவிக்காக பல இணையங்கள் ,ஊடகங்கள், அனுதாபங்களையும் ,கவலையையும் வெளியிட்டிருந்தன.முத்துமணி இணையத்தினுடாகவும் அவள் உயிர் நீத்தது பெரிய இழப்பே அவளுக்கு நடந்த அவலத்தை புரிந்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என வேண்டி நிற்கின்றேன்.

ஆனால் நம் ஈழத்தில் கற்பை இழந்து உயிர் விட்ட தமிழ் சகோதரிகளுக்காக நாம் என்ன செய்தோம் ???அவர்களது உயிர் மட்டும் என்ன கிள்ளுக்கீரையா ?ஒரு மாணவிக்காக இன்று உலகமே கலங்கி நிற்கிறது ..இறுதி யுத்தத்தில் எத்தனை நுற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் கர்ப்பழிக்கப்பட்டும்,கொடுமைப்படுத்தப்பட்டும் உயிர் விட்டனர்.அவர்களிற்காக யார் அனுதாபப் பட்டனர்??????????????



~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv