குறுந்தகவலிற்கு வயது இருபது.

இன்று எங்கும் எப்போதும் மக்கள் பெரும்பாவணைக்கு உட்படுத்தும் ஒரு செய்தித் தொடர்பாடல் எதுவென்றால் அது குறுந்தகவலேயாகும். எங்கும் எதிலுமே வியாபித்திருக்கும் இந்தக் குறுந்தகவல் பயன்பாடு அதிகம். சிலவேளைகளில் தாங்களாகவே தன்னந்தனியே சிரித்தபடி சிலர் குறுந்தகவல்கள் அனுப்பிக் கொண்டிருப்பதை நாங்கள் நாளாந்தம் பொது இடங்களில், போக்குவரத்துக்களில் என எல்லா இடங்களிலும் காணலாம்.


 இன்று உலகத்தைக் கட்டிப்போட்டுள்ள இந்தக் குறுந்தகவல் பரிமாற்றத்திற்கான முதலாவது தகவலை அனுப்பியவர் கனடா மொன்றியலைச் சேர்ந்த நீல் பாப்வோத் ஆகும். இப்போது 42 வயதாகும் நீல் அப்போது லண்டனிலுள்ள ஒரு மென்பொருள் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் அவரது வேலையில் அவருக்கு இடப்பட்ட பணி குறுந்தகவல் ஒன்றை அனுப்புவதே.

நிட்சயமாக அப்போது நீல் பாப்வோத் கனவிற்கூட எண்ணியிருக்க மாட்டார் தான் அனுப்பப்போகின்ற இந்த குறுஞ்செய்தி தொலைதொடர்பு உலகத்தில் இப்படியொரு புரட்சியை உண்டு பண்ணப் போகின்றது என்று. இன்று பல பில்லியன் மக்களால் உபயோகிக்கப்படும் இந்தக் குறுந்தகவல்பரிமாற்றத்தின் முதலாவது செய்தியாக நீல் பாப்வோத் அப்போது அனுப்பியது “நத்தார் வாழ்த்துக்கள்” என்பதேயாகும்.

டிசம்பர் மாதம் இச்சம்பவம் இடம்பெற்றதால் நீலிற்கு வெறொன்றையும் சிந்திக்கத் தோன்றவில்லை. இப்படித்தான் இருபது ஆண்டுகளிற்கு முன்பு குறுந்தகவல் அறிமுகமானது. நாளை நீங்கள் தெருவில் செல்லும் போது தங்களிற்குள் சிரித்தபடியே வார்த்தைகளுடன் உறவு வளர்ப்பவர்களை கண்ணுற்றால் நீங்களும் ஒரு நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து விட்டுச் செல்லுங்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv