கடதாசி கழிவுகளிலிருந்து செங்கற்களை தயாரித்து ஆய்வாளர்கள் சாதனை

இறைச்சிக்காக பயன்படுத்தப்படும் விலங்குளிலிருந்து பெறப்படும் இரத்தத்தின் மூலம் செங்கட்டிகள் உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்றதை செய்திகளின்மூலம் அறிந்திருப்பீர்கள்.


ஆனால் ஸ்பெயின் நாட்டின் Jaen பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் இதுவரை காலமும் நுரைக்கும் பொருட்கள் மற்றும் மின்கலத்தயாரிப்புகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த கடதாசி கழிவுகளிலிருந்து செங்கற்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

 இதற்கென கடதாசி தொழிற்சாலைகளிலிருந்து பெறப்படும் செலுலோசுக் கழிவு மற்றும் கழிவுநீர்ப்பரிகரிப்பின்போது அல்லது நீர்ச்சுத்திகரிப்பின்போது வெளியேற்றப்படும் சகதி (கழிவு) என்பனவற்றின் சேர்க்கையை பயன்படுத்தியதாக தெரிவித்த குறித்த ஆராய்ச்சியாளர்குழு இச்செங்கற்களை வெப்பமேற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

 அத்துடன் இவற்றினை உற்பத்தி செய்வதற்கான செலவு குறைவாக இருப்பதுடன் உறுதியானவையாகவும் காணப்படுகின்றன.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv