ஏன் எனை மறந்தாய்

காதலா............
தினம் ஒரு மனம் வேண்டும்
 உனைப் போல்
 தினம் தினம் மாறுவதற்கு
ஆனாலும் -நான்
பாசமாய் என்னோடு
வாழ்கிறாய் என்றிருந்தேன்
 நாம் வாழ்ந்த
வாழ்க்கையை ஒரு நொடியில்
பொய்யென உரைத்துவிட்டாயே.........
 உன்னோடு கலந்த என்
பெண்மை என்ன செய்யும்?...............
பாவம் அது வழிமாறிப் போனேனே
 என்று புலம்புகிறது
தனக்குள்ளே.
நீ இப்போ தினம் உரைப்பதுபோல
 காதலில் இது எல்லாம் சகஜம் என
 எண்ண என்
பெண்மைக்குத் தெரியவில்லை.

என் தாயோடும், உன் குடும்பத்தோடும்
 நாம் வாழவேண்டும் என்று போராடினாய்.
 அதன் பின்தான்
 எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை
 தேடினாலும் கிடைக்காது
என முடிவுசெய்தேன் -
ஆதலால் என்னை
உனக்குத் தந்தேன்

ஆனால் இன்று
 நாம் வாழவேண்டும்
என்று சொன்ன அதே
வாயால் நாம்
வாழமுடியாது,
நமக்கு ஒத்துவராது
என்கிறாயே
எப்படி முடிகிறது
உன்னால் மட்டும்?............?.......
இப்படி? தானாய் வந்தது
தானாய் போகிறது என்று
உன்னைப் போல்
உதறிவிட முடியவில்லை


 என்னால்.
 பல பிரிவுகளையும்,
காயங்களையும்
 தாங்கிய என் இதயத்துக்கு
உன் பிரிவை மட்டும்
தாங்க முடியவில்லை.
காரணம்
 எனக்கும் உனக்கும்
மட்டும்தான் தெரியும்.
நான்தான்
தினம் சொல்வேன் உனக்கு
 வற்புறுத்தி வாழ்வது வாழ்க்கையல்ல
 என்று

போராடி வாழ்வதுதான்
 வாழ்க்கை
 ஆனால் உன்னோடு
 போராட முடியவில்லை
என்னால்
ஏனெனில் உன் இதயத்தில்
நான் இல்லை
 என்பது புரிகிறது
என் இதயத்துக்கு
ஆனாலும் முடியவில்லை

என்னால்
ஆனால் இன்று
நீ எனக்குச் செய்த
அதே பிழையை நாளை
 நீ உணர்வாய்
அப்போது புரிவாய்
நான் இன்றுபடும் வேதனையை.......
 சாபம் போடவில்லை நான்
 உனக்கு
 வாழ்த்துகிறேன்

 உன்னை நீ எங்கிருந்தாலும்
 வாழ்கவென.
றோமியோ,யூலியட்,
லைலா, மச்சுனு
போல் தியாகியல்ல நான்
ஆனாலும் தியாகியாகிறேன்
 உனக்காக
என் காதலையும்,
 என் பெண்மையையும்..........................      
                                                                                   ஷாலினி         
                                                                                           

1 கருத்துரைகள்:

Anonymous said...

நல்ல கவிதை ,,,மேலும் தொடர வாழ்த்துக்கள்

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv