ஏன் எனை ஏமாற்றினாய்

ரகசியமான சில்மிசங்களுக்குள்
 முன்னும் பின்னுமாய்
 வேர் விட்டுக்கொண்டிருந்தன 
மூச்சின் நிழல்கள்...!


தேகத்தை தீயாக்கி
 தேவை தீர்த்த உணர்வுகளை
 அரும்போடு வதம் செய்ய
பிரிவினை
சுமந்தன விழிகள்...!

அர்த்தமற்ற சாமத்தில்
 அடிமுடி தேடியதால்
 அகரம் இழந்தது அன்பும்
 அறியாத வேட்க்கைகளும்...!

தாகம் தீர்க்க என்னை குடித்தாய்
அன்பென நான் நினைகையில்
உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்
நான் செய்தது தவறாக இருந்தால் என்றாய்...

அந்த நிமிடமே மரணித்து விடலாமா
என மனம் குமுறியது.
வாழ்க்கை  சக்கரத்தில்
நீயும்  இவ்விடம்
 வருவாய் என நான் அறிவேன்
அந் நிமிடம் உன் மனதில் நான் வருவேன்.
                                                                                         
                                                                                            ஜனனி

1 கருத்துரைகள்:

Anonymous said...

this is true

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv