ஐ.நா இரகசிய அறிக்கை குறித்துசெல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம் ஆகியோரின் கருத்துப்பகிர்வு- காணொளி இணைப்பு


பிபிசிக்கு கசிந்ததாகக் கூறப்படும் ஐநா அறிக்கை அதிகாரபூர்வமாக வெளிவந்த பின்னர் அதுகுறித்து சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம், மற்றும் ஆர்.கே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் தம் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிபிசி க்கு வழங்கிய செவ்வியில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்காஇ தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

யுத்த வேளையில் ஐநா அதிகாரிகள் வன்னியில் இருந்து வெளியேறியமையானது - அங்கு செய்தியாளர்களோ அல்லது வேறு எந்த கண்காணிப்பாளர்களோ செல்ல அனுமதிக்கப்படாத நிலையில்- அங்கு ஒரு சாட்சிகளற்ற யுத்தத்துக்கு காரணமாகிவிட்டது என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமக்கு எவரையும் பழிவாங்கும் நோக்கம் கிடையாது என்கின்ற போதிலும் போர் வேளையில் என்ன நடந்தது என்பது குறித்த உண்மை அறியப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐநா தமது ஆணைக்கு உட்பட்ட வகையில் செயற்பட்டதா என்பதை அதன் செயலாளர் ஆராய்ந்து அதற்கான பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் முன்னாள் பா.உ. சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் மூத்த ஊடகவியலாளரான ஆர்.கே இராதாகிருஸ்ணன் ஆகியோர் இந்திய ஊடகமான புதிய தலைமுறைக்கு தம் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv