மூத்த மகன்-கவிதை

 நான்                                                                                  
யாராய் இருந்திருப்பேன்
 அக்காவின் உலகில் பொட்டிட்டும் பூவைத்தும்
அழகு பார்த்தவள்

 தெருச்சண்டைகளில்
 எனக்காய் வாதிட்டவள்

 பாவாடை மடிப்புகளில்
 எனைப் பாதுகாத்து
 அப்பாவின் பிரம்படிகளை
 அவளே வாங்கியவள்

 பந்திகளில் முந்தி
 எனக்காய்
பலகாரம் சேமித்தவள்

 கட்டிக் கொள்பவனை
எனக்கும் பிடிக்கவேண்டுமென
 மீசை வைக்கச் சொன்னவள்

 அவள் உலகில்
 யார் யாராகவோ
நான்


 யாருடைய உலகிலும்
 தம்பியாக முடியாமல்
 மூத்த மகன்

                                                மன்னார் அமுதன்

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv