கார்த்திகை தீபமும்,மாவீரர் நினைவும்
இன்று இந்துக்கள் கொண்டாடும் கார்த்திகை தீப திருநாளாகும்,அதே போல் கார்த்திகை 27 ம் நாள் எமது வீர காவியங்களான மாவீரர் தின நாளாகும் நாட்டின் பலபாகங்களிலுமுள்ள இந்துக்கள் இன்று இரவு தங்களது வீட்டிலும்,ஆலயங்களிலும் தீபங்களை ஏற்றி தமது தீப திருநாளை கொண்டாடுவர்.இருந்தபோதிலும் இம்முறை மாவீரர் நாள்,தீபத்திருநாள் இரண்டும் ஒரே நாளில் அதாவது இன்று என்பதால் மக்கள் தீப திரு நாளை கொண்டாட முடியாமல் இருக்கிறது.

மக்கள் இன்று விளக்கேற்றுவது தீப திருநாளுக்கா,அல்லது மாவீரர்களுக்கா எனும் கேள்வி இலங்கை இராணுவத்தினரிடையே ஏற்பட அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போல நாட்டில் பல பாகங்களிலுமுள்ள மக்களை அச்சுறுத்தி உள்ளனர்.

உதாரணமாக யாழில் சிட்டி விளக்குகள் விற்ற வியாபாரியை தாக்கி உள்ளனர்,மற்றும் மட்டு,அம்பாறை,அக்கரைப்பற்றில் உள்ள சில பாகங்களில் மக்கள் கார்த்திகை தீபம் ஏற்ற தடை விடுக்கப்பட்டுள்ளது, கண்டிக்கப்பட வேண்டிய விடயம்,


எது எவ்வாறு இருப்பினும் தமிழர் மாவீரர் தினத்தில் வெளிப்பாடாக செயலாற்ற வேண்டிய அவசியமில்லை வீர காவியங்களுக்காக  மனதால் அஞ்சலி செலுத்துவதே போதுமானது,இது அவர்களுக்கு புரியவில்லை,

இருப்பினும் எம் புலம் பெயர் தமிழ் சகோதர ,சகோதரிகள் இன்று உலகளாவிய ரீதியில் வெளிப்படையாக அனுஷ்டிக்க  உள்ளனர்.அவர்களோடு நாமும் கை கோர்ப்போம் மனதளவில்


~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv