முதன் முதலில் காகிதத்தைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்..!

இன்று நாம் பயன்படுத்தும் காகிதத் தாளுக்கு 2000 வருடம் வயதாகிறது. கி.பி. 109ல் சாய்லன் என்ற சீன நாட்டுக்காரார் முதன் முதலில் காகிதத்தைக் கண்டுபிடித்தார்.

 சீன மன்னரின் அமைச்சராகப் பதவி வகித்தவர் சாய்லன. அவர் மல்பெரி மரப் பட்டையைக் கூழாக்கி கரடு முரடான ஒரு வகைக் காகிதத்தைத் தயாரித்தார். காகிதப் பணத்தை முதன் முதலாக உருவாக்கி புழக்கத்தில் விட்டவர்களும் சீனர்களே.


இந்தச் செய்தியை சீனாவில் நெடுகாலம் வாழ்ந்த இத்தாலியப் பயணி மார்க்கோ போலே எழுதிய நூலில் காணலாம். பண வீக்கத்தை முதன் முதலாக அனுபவித்த நாடும் சீனா தான் என்பது பிறிதோர் செய்தி. காகிதப் பணத்தை அளவுக்கு மீறிய எண்ணிக்கையில் வெளியிட்ட சீன மன்னன் நாட்டில் பண வீக்கத்தை ஏற்படுத்தினான்.

பணத்தின் பெறுமதி குறைந்து பொருட்களின் விலை ஏற்றமடைந்தது. இதை பண வீக்கம் என்பார்கள். புராதன எகிப்தில் நைல் நதி ஓரத்தில் வளர்ந்த ஒரு வகை தாழைச் செடியின் நீளமான ஓலையை பதனிட்டு எழுதுவதற்குப் பயன்படுத்தினார்கள்.

 பிரமிட்டுக்களைத் திறந்த போது இந்த ஏடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றைப் பப்பைரஸ் (Papyrus) என்று அழைக்கிறார்கள். ‘பேப்பர்’ (Paper) என்ற ஆங்கிலச்சொல் அதிலிருந்து பிறந்தது.

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv