சந்திரன் பூமியிலிருந்து உருவானது

சந்திரனானது பூமியின் ஒரு பாகமாக இருந்து பிறிதொரு பாரிய கோள் பூமியில் மோதியதால் பிளவடைந்துள்ளதாக கருது வதாக ஹவார்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


 அவர்களது ஆய்வின் முடிவுகள் ‘சயன்ஸ்’ விஞ்ஞான ஆய்வேட்டில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. பூமியும் சந்திரனும் ஒரே உட்கட்டமைப்பையும் இரசாயன கட்டமைப்பையும் கொண்டுள்ளதால் புதிய விதிகளின் பிரகாரம் சந்திரன் பூமியின் ஒரு பாகமாக இருந்து பிரிந்த ஒரு துணைக்கோள் ௭னக் கருதுவதாக இந்த ஆய்வில் பங்கேற்ற சாராஹ் ஸ்டீவார்ட்டும் மரிஜா குக்கும் தெரிவித்தனர்.

 பூமியின் மீது இராட்சத கோளொன்று மோதியதால் பூமியிலிருந்து பிரிந்த பகுதி சந்திரனாக உருமாறியிருக்கலாம் ௭ன அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv