மத்திய பிரதேச எல்லையில் வைகோ இரவிரவாக தரையில் அமர்ந்து போராட்டம்! சுட்டெரிக்கும் வெயிலிலும் தொடர்கிறது!

இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு எதிராக போராட்டம் நடத்தச் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மத்திய பிரதேச எல்லையில் தொண்டர்களுடன் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில்,நேற்று இரவிலிருந்து தரையில் அமர்ந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றார். மத்திய பிரதேச மாநிலம், ராய்சென் மாவட்டம் சாஞ்சியில் புத்த மற்றும் இந்திய அறிவுசார் கல்வி பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது.சுமார் ரூ.200 கோடி செலவில் அமைய உள்ள இந்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது. இவ்விழாவில் கலந்துகொள்ள ராஜபக்ச நேற்று டெல்லி வந்துவிட்டார்.


 இந்நிலையில், ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விழா நடக்கும் சாஞ்சியில் போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்தார்.

மேலும் வாசிக்க 

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv