வீட்டு வேலை மார்புப் புற்றுநோயி​ன் தாக்கத்தை குறைக்கும்


உயிர்கொல்லி நோயாகவும், தெளிவான மருத்துவ தீர்வுகள் இல்லாத நோயாகவும் புற்று நோய் விளங்குகின்றது. எனினும் சில நடைமுறைகளைச் சீராகப் பின்பற்றுவதன் மூலம் இப்புற்று நோய்த் தாக்கங்களிலிருந்து விடுபட முடியும்.

அதிலும் பெண்களை அதிகளவில் தாக்கும் புற்றுநோய் வகையான மார்புப்புற்று நோயை, தினமும் வீட்டுவேலைகளில் ஈடுபாடு காட்டுவதன் மூலம் இந்த அபாய எச்சரிக்கையிலிருந்து சற்று விடுபட முடியும் என பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவித்துள்ளது.
அதாவது தினமும் இரண்டு மணி முதல் இரண்டரை மணிநேரம் வேலை செய்யும் பெண்களை இப்புற்றுநோய் தாக்குவதற்கான சாத்தியம் ஆறு சதவீதம் குறைவு என்றும், ஆறு மணித்தியாலங்கள் வரையில் வேலை செய்வோருக்கு 13 சதவீதத்தினால் இப்பாதிப்பு குறைக்கப்படுகின்றது என்றும் அறியப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv