தேயிலையால் புற்றுநோய்க்கான மருந்துகளை தயாரிக்க முடியும்

தேநீர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தேயிலைகளில் பல்வேறு தரங்கள் காணப்படுவது யாவரும் அறிந்த விடயமே.
இவற்றுள் பச்சை நிறத் தேயிலைகள் புற்றுநோய் கட்டிகளை முற்றாக அகற்றும் என்பதுடன், அவற்றைப் பயன்படுத்தி புற்றுநோய்க்கான மருந்துகளை தயாரிக்க முடியுமென விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Strathclyde பல்கலைக்கழக குழு ஒன்றின் முயற்சியினால் புற்றுநோய்களுக்கான இப்புதிய மருந்து கண்டறியப்பட்டுள்ளதுடன், ஆய்வின் போது பச்சை தேயிலை அடங்கிய கலவை ஒன்றினைப் பயன்படுத்தி மனித உடலில் காணப்பட்ட 40 சதவீமான புற்றுநோய்க் கட்டிகளை இல்லாது செய்து வெற்றியும் கண்டுள்ளனர்.
முதற்தடவையாக இயற்கை தாவரம் ஒன்றினைப் பயன்படுத்தி புற்றுநோய் நிவாரணி ஒன்றினை வெற்றிகரமாக ஆராய்ச்சி செய்திருப்பதால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என இவ் ஆய்வுக் குழுவில் அங்கம் வகிக்கும் டாக்டர் கிறிஸ்டின் டிபெஸ் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv