மரணித்துவிடு என


மன்னிக்கவும் முடியவில்லை
மறக்கவும் முடியவில்லை அவளை
மாலைபொழுதின்
மயக்கத்திலே அவளின்
மனதைப் படிக்கையில்
மரணங்கூட எளிதாய் தான்
மனதோரங்களில் மலரும் பூப்போல

மணலை அணைக்கும் கரை அலை
அவள் கால் சலங்கை சத்தமோ என்ன
மண்டியிட்டு கேட்டேன் அந்த இறைவனை
மலரும் பூப் போல என்
வாழ்வை ஒரு நாளிலேயே
மரணித்துவிடு என...


                                                           தழிழ்நிலா

1 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

மனம் நெகிழும் வரிகள்...

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv