என் இனியவளின் பாசம்


எங்கேயோ கேட்ட குரலில்
எப்படியோ இடறி விழுந்தேன்
எகிறிக்குதித்து எந்தன் இதயம்
எட்டி பார்க்க நினைக்கும் அவளை
தாயின் பாசம் மாறவில்லை
அவளின் பேச்சில் கண்டுகொண்டேன்
ஹலோ என்ற வார்த்தை கூட
வாலி வடித்த கவிதை போல
சேகரித்து வைத்த நினைவை
நிஜப்படமாய் காண்கிறேனே
அனாமிகாவாய் வந்த பெண்ணை
அன்னையாக பார்கின்றேனே !

அவள் அருகில் கூட அமர்ந்ததில்லை
உறவுகளாய் வாழ்கிறோமே
இனியவளின் குரலைகேட்ட
குயிலினங்கள் கூவக்கூட
வெட்கம் கொள்ளும்
அவளை கண்டு கொண்டு
கண்ணைமூட
சேர்த்து வைப்பேன்
உயிரைக் கொஞ்சம்.                            

                                                           மட்டு மதியகன்    

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv