முக்காடு போன்ற ஹெல்மெட் அறிமுகம்…..


பைக்கில் செல்பவர்களின் பாதுகாப்பை கருதி ஹெல்மெட் அணிவது அவசியம் என்பதை உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. பல நாடுகள் இதை கட்டாயமாக்கி உள்ளன. எனினும் தலை முடி உதிர்கிறது, வியர்வை பாதிப்பு, தலைவலி போன்ற பல காரணங்களை கூறி ஹெல்மெட் அணிவதை பைக் ஓட்டிகள் தவிர்க்கின்றனர்.

 இதனால் விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், ஹெல்மெட் வடிவத்தை மாற்றி புதிய தலை கவசத்தை அனாஹப்ட் மற்றும் டெர்சி அல்ஸ்டின் என்ற சுவீடனை சேர்ந்த பெண்கள் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் அறிமுகமாக உள்ள இந்த ஹெல்மெட்டின் சிறப்பம்சம் குறித்து அவர்கள் கூறியதாவது : அபராதம், தண்டனைக்கு பயந்து ஹெல்மெட் அணிவதற்கு பதில், தங்கள் பாதுகாப்புக்கு கட்டாயம் அணிய வேண்டும் என்ற எண்ணத்தை மக்களிடம் உருவாக்குவதை குறிக்கோளாக கொண்டு ‘ஹோவ்டிங் ஹெல்மெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை அணிந்தால், பார்ப்பவர்களுக்கு ஹெல்மெட் அணிந்து இருப்பது போல் தெரியாது. சட்டை காலர் அல்லது துப்பட்டாவில் முக்காடு போட்டது போல் இருக்கும். இன்ஃப்னேட்டர் பொருத்தப்பட்டு காற்று வசதியுடன் கூடிய இதை அணிந்தால் முடி உதிரும் பிரச்னை, வியர்வை தொல்லை இருக்காது. விமானத்தில் உள்ள கருப்பு பெட்டி (ப்ளாக் பாக்ஸ்) வசதியும் இதில் உள்ளது. இதை அணிந்து கொண்டு பயணம் செய்பவரின் முழு விவரத்தையும் தன்னுள் பதிவு செய்து கொள்ளும்.
இதில் ஆக்சிலரோமீட்டர் மற்றும் கைரோஸ்கோப்ஸ் பொருத்தப்பட்டு சென்சார்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் ஓட்டுநரின் வழித்தடம், விபத்துகள் குறித்து அறிந்து கொள்ள முடியும். இதில் உள்ள பவர் பட்டன் மூலம் அவ்வப்போது சார்ஜ் செய்து கொள்ளலாம். எல்இடி விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஒரு மாதம் வரை தாக்குபிடிக்கும். நுண்ணிய யுஎஸ்பி போர்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விற்பனைக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv