2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறைதோன்றும் நீலநிற பௌர்ணமி இம்முறை ஓகஸ்ட் 31ஆம் திகதி!


எதிர் வரும் ஒகஸ்ட் மாதத்தில் பல புனித நாட்கள் வருகிறது. அதன்படி ஒகஸ்ட் 1ஆம் திகதி, மற்றும் 31ஆம் திகதிகளில் 2 பௌர்ணமி நாட்கள் வருகிறது. 1ஆம் திகதி தோன்றும் பௌர்ணமி வழக்கம்போல் இருக்கும். 31ஆம் திகதி தோன்றும் பௌர்ணமி நீல கலரில் தெரியும். இது அபூர்வமான நிகழ்வு ஆகும்.
2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இதுபோன்று நீலநிற பௌர்ணமி காணப்படும். பௌர்ணமி நாட்களில் ஏற்படும் புவிஈர்ப்பு விசையால் பூமியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


தற்போது ஆடி மாதம் நடைபெற்று வருகிறது. ஆடி வெள்ளி கிழமைகளுக்கு தனி சிறப்பு உண்டு. அம்மனுக்கு உகந்த நாள் என்பதால் அம்மன் கோவில்களில் ஆடிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.


ஒகஸ்ட் மாதத்தில் 2 ஆடி வெள்ளிக்கிழமைகள் வருகிறது. அத்துடன் பவுர்ணமியும் சேர்ந்து வருவதால் ஆகஸ்ட் மாதத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.


மேலும் ஒகஸ்ட் 9ஆம் திகதி கிருஷ்ண ஜெயந்தியும் 20-ஆம் திகதி ரம்ஜான் பண்டிகையும் வருவதால் ஒகஸ்ட் மாதம் புனித மாதமாக கருதப்படுகிறது.

1 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

அரிய நிகழ்வையும், நல்ல பல தகவல்களையும் பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள்...

நன்றி… தொடர வாழ்த்துக்கள்...

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv