”கள்ளக்காதலால் ஏற்பட்ட கற்பம்“-தவறான செய்தி- பாதிப்புக்கு உதயன் பதில் சொல்லுமா ?

அண்மையில் சங்கானைப்பகுதியில் திருமணமாகிய பெண்ணொருவர் வயிற்றில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக யாழ் வைத்தியசாலையில் மரணமடைந்தார். குறித்த பெண்ணிற்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் ,அத்துடன் அவரது கணவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

இந்த சம்பவத்தை வழமைபோலவே பல மஞ்சள் இணையத்தளங்கள் ”கள்ளக்காதலால் ஏற்பட்ட கற்பம்“ என்று செய்தி வெளியிட்டன. நாம் மலினமான இணையத்தளங்கள் என்று ஏற்கனவே பட்டியலிட்ட இணையத்தளங்களே இந்த செய்தியை முன்னின்று பிரசுரித்திருந்தன. அதில் ஆச்சரியம் இல்லை.

ஆனால் யாழ் உதயன் பத்திரிகையும் இச்செய்தியை பெண்ணினுடைய பெயரையும் குறிப்பிட்டு வெளியிட்டிருக்கிறது. இன்று(!) வரை அதிக மக்களால் பார்க்கப்படுகின்ற ஒரு ஊடகம் , இவ்வாறான ஊடக அசிங்கத்தை நிகழ்த்தியிருப்பது மன்னிக்கப்பட முடியாத குற்றமாகும்.
யாழ் வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி தகவல் தெரிவிக்கையில் வயிற்றில் இருந்த கட்டி வெடிந்ததன் காரணமாக ஏற்பட்ட இரத்த இழப்பினாலேயே மரணம் சம்பவித்தது என்றும் பெண்ணை முன்னமே வைத்தியசாலையில் காட்டியிருந்தால் இதை தவிர்த்திருக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவர் மீது மேற்கொள்ளப்பட்ட மருத்துவப்பரிசோதனைகளின் படி அவர் கர்ப்பம் தரித்த நிலையைில் இருந்திருக்கவில்லை. (கருக்கலைப்பு நிகழ்ந்தால் கூட இதனை பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் )
அச்சூடகப் பொறுப்பும் – ஊடக தர்மமும்.

இணைய ஊடகங்கள் பல தமது மறுப்பறிக்கையையும் மன்னிப்பையும் உடனடியாக வெளியிட்டுள்ளன. ஆனால் எந்த வகையிலும் வைத்திய அதிகாரிகளை தொடர்பு கொள்ளாது ,உறுதிப்படுத்தாது இப்படியான அபாண்டச்செய்திகளை உதயன் வெளியிடுவதால் மலினமான விளம்பரத்தையும் பத்திரிகை விற்பனை அதிகரிப்பையும் தவிர, எந்த சமூகப்புரட்சியை உருவாக்க முடியும் ?. இந்தப் பெண்ணினுடைய குடும்பம் பட்ட மனவேதனைக்கு எந்த வகையில் பரிகாரம் செய்ய முடியும்.

உதயன் பத்திரிகையின் செய்தி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.உதயன் பத்திரிகை பின்வரும் கேள்விகளுக்கு பதில்கூற வேண்டியது அவசியமாகும்
எந்த வைத்திய அதிகாரிகள் தந்த தகவலின் அடிப்படையில் இந்தச் செய்தி உறுதிப்படுத்தப்பட்டது. ?

தகவல் உண்மையாகவே இருக்கும் பட்சத்தில் கூட பாதிக்கபட்ட நபரின் பெயரை குறிப்பிட முடியாது ,எந்த நியாய அடிப்படையில் பெயர் வயது என்பவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டது இந்த பத்திரிகை ?
தனிமனித ஒழுக்கம் சார்ந்த பிரச்சினைகளில் , சமூகத்திற்கு பாடமாக அமையவேண்டும் என்ற நோக்கில் ,பிரச்சினையை செய்தியாக்கலாமே தவிர ,நபர்களின் பெயரைக்குறிப்பிடலாகாது என்ற அடிப்படை தர்மம் இவர்களுக்கு இல்லையா ?

நாளை ஒரு சாதாரண மறுப்பறிக்கை விடுவதன் மூலமாக , பிணமாகக் கிடந்த வேளையில் கூட இந்த தவறான பத்திர‌ிகைச் செய்தியை நம்பி , கேவலமாகப் பாத்திருக்கப்பட்டிருக்க கூடிய அந்த பெண்ணின் துர்ப்பாக்கிய நிலைக்குஎன்ன பரிகாரம் இவர்களால் செய்ய முடியும் ?

இந்த செய்தியை வெளியிட்டதை பொறுப்பேற்று எவராவது வேலையிலிருந்து துாக்கப்படுவார்களா ? அல்லது பகிரங்க மன்னிப்பு செய்தியாளரும் ஆசிரியரும் கோருவார்களா?

பலரும் அவதானித்துக்கொண்டே இருக்கிறார்கள் உதயனே உனது நிலைப்பாடு என்ன ?


-          

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv