மொனாலிஸாவின் எலும்புக் கூடு கண்டுபிடிப்பு? (பட இணைப்பு)


 உலகப் பிரபல்யம் பெற்ற ஓவியமான மொனாலிஸா ஓவியத்தினை வரைவதற்கு மொடலாக இருந்த லிஸா கிரார்தினியின் எலும்புக்கூடுகளை கண்டுபிடித்துள்ளதாக தொல்பொருளாய்வார்கள் தெரிவித்துள்ளனர்.

மொனாலிஸா ஓவியத்தை டாவின்சின் வரைவதற்கு தூண்டுகோலாக இருந்தவர் லிஸா கிரார்தினி.

இப் பெண் தொடர்பாக பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகியுள்ளன.

அவற்றில் சில உண்மையானவையாகவும், சில வதந்திகளாகவுமேயுள்ளன.


இந்நிலையில் இத்தாலிய தொல்பொருளியலாளர்கள் மொனாலிஸா ஓவியத்தினை வரைவதற்கு மொடலாக இருந்த லிஸா கிரார்தினியின் எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியின் புளொரொன்சில் உள்ள புனித உர்சுலா என்ற மடமொன்றிலேயே எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லிஸா கிரார்தினி, இத்தாலியில் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த பட்டு வியாபாரியான பிரன்கெசோ டெல் கியோகொண்டோவின் மனைவியாவார்.

மொனாலிஸா இத்தாலியில் லா கியோகொண்டா என அறியப்படுகின்றது.

நவீன வராலாற்று ஆசிரியர்களும் மொனாலிஸா படத்திற்கு மொடலாக இருந்தவர் லிசா டெல் கியோகொண்டா என ஏற்கொண்டுள்ளனர்.

வரலாற்றுக்குறிப்புகளின் படி அப்பெண் தனது கணவரின் மறைவிற்குப் பின்னர் துறவியாக மாறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் 1542 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் திகதி தனது 63 ஆவது வயதில் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது உடல் அம் மடத்திலேயே புதைக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

குறித்த மடத்தில் கடந்த வருடம் தொல்பொருளியலாளர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத்தொடங்கினர்.

இதன்போது மண்டையொன்று கண்டுபிடிக்கப்பட்டது.


எனினும் நிதிப்பற்றாக்குறை காரணமாக அந்த ஆராய்ச்சி நடவடிக்கைகள் ஸ்தம்பித்துப் போயின.

இந்நிலையில் கடந்த மாதமளவில் தொல்பொருளியலாளர்கள் ஆராய்ச்சிகளை மீண்டும் ஆரம்பித்தனர்.

அதன்போது வரலாறுக் குறிப்பொன்றும், பெண்ணின் எலும்புக்கூடொன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது அம்மண்டையோடும், எலும்புக்கூடுகளும் ஒத்துப்போகின்றனவா என்ற ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எலும்புக்கூடு கண்டு பிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் மேலும் இரண்டு எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்விரண்டு எலும்புக்கூடுகளும் அவரது பிள்ளைகளின் எலும்புக் கூடுகளாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

லிசா டெல் கியோகொண்டாவின் எலும்புக் கூடும் மற்றைய இரண்டு எலும்புக்கூடுகளும் ஒத்துப்போகின்றனவா எனப் பரிசோதனை செய்யப்படவுள்ளது.

இப்பரிசோதனைகளின் பின்னர் அவரது மண்டையோட்டினை வைத்து நவீன தொழில்நுட்பங்களின் மூலம் அவரது முகம் எவ்வாறு இருந்தது என்பதனை உருவகப்படுத்த முடியுமென ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இவற்றையடுத்து மொனாலிஸாவின் மர்மப் புன்னகைக்கும் விடைகிடைக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ___


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv