நெஞ்சு வலிக்குதடி..


பேசிய பேச்செல்லாம்
பழங்கதையாய்ப் போனதடி
ஆசையாய் நான் இருந்தேன்
அணை போட்டுத்  தடுப்பதேன்
நாள் முழுவதும் பேசியே
நட்பைத்தான் வளர்த்தோமே
வாழ்நாள் முழுவதும்  பேசவே
வாக்களித்ததை மறந்ததேன்?

பற்றிக் கொண்ட ஆசைத்தீயைப்
பரவாமல் தடுத்திடவே
சிற்றின்ப ஆசைதனை
சிதறி உடைத்தேனே!
பார்க்க மறுப்பது
உன் நியாயம்
பேச மறுப்பது
என்ன நியாயம்?
சேர்த்து  வைத்த ஆசையையெல்லாம்
சில்லறையாய்க்  கொட்டிவிட்டேன்
வார்த்தை தவறிவிட்டாய் - என்
நெஞ்சு வலிக்குதடி....

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv