நீயே...

திரும்பி பார்ப்பதை
தவிக்கிறேன்
உன்னோடு நான்
சண்டை இட்ட நாட்களை ...
காற்றில் எழுதினேன்
என் காதலியின் பெயரை - அவள்
காற்றோடு போகட்டும்
என்று அல்ல
நான் வாங்கும் மூச்சுக்காற்றிலும் - அவள்
கலந்திருக்க வேண்டுமென்று....

தனித்திருக்கும் பொழுதுகள் - உன்னை
தவிர்த்திருக்கும் பொழுதுகள் - இரண்டும்
தாங்காத சுமை தான்
இன்றும் உன் கண்ணனுக்கு ..
என் வாழ்வின் விளிம்பில்
உள்ளதாய் உணர்கிறேன் - நீ
என் அருகில் இல்லாத
பொழுதுகளில் ....                                   தனசீலன்

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv