ப்ளூட்டோவின் 5வது துணைக் கிரகம் கண்டுபிடிப்பு
Sunday, 15 July 2012
மிகச் சிறிய கிரகமான ப்ளூட்டோவின் 5வது துணைக் கிரகத்தையும் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புதிய துணைக் கிரகத்தை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.
சூரியக் குடும்பத்தில் 10வது கிரகமாக சில காலத்திற்கு முன்பு வரை திகழ்ந்து வந்த ப்ளூட்டோ பின்னர் அதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு விட்டது. தற்போது அதை சிறிய கிரகம் அதாவது ட்வார்ப் பிளானட் என்று அழைக்கின்றனர்.
ப்ளூட்டோவைச் சுற்றிலும் நான்கு துணைக் கிரகம் இருப்பது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது 5வது நிலாவை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
எஸ் 2012 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய கிரகம், ப்ளூட்டோவிலிருந்து 12 மைல் தூரத்தில் உள்ளது. ஒழுங்கற்ற வடிவில் காணப்படும் இந்த புதிய கிரகத்தையும், ப்ளூட்டோவின் 5 கிரகத்தையும் சேர்த்துப் பார்க்கும் போது ரஷ்ய பொம்மை போல இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ப்ளூட்டோவின் மிகப் பெரிய நிலாவின் பெயர் செரன். இது 648 மைல் தூரத்தில் உள்ளது. இதை 1978ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர்.
மற்றொரு கிரகத்தை நிக்ஸ் 20 மைல் தொலைவிலும், ஹைட்ரா 60 மைல் தூரத்திலும் உள்ளது. இந்த இரண்டும் 2005ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன.
கடந்தாண்டு 4வது துணைக்கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஐந்தாவது நிலவும் ப்ளுட்டோவைச் சுற்றியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.









0 கருத்துரைகள்:
Post a Comment