பீசாவினால் இருதய நோய் பாதிப்பு


அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் அறிமுகப்படுத்திய பீசா, பர்கர், வறுத்த இறைச்சி போன்ற “பாஸ்ட் புட்” எனப்படும் உணவு வகைகளை இன்றைக்கு இளைஞர்கள் விரும்பி சாப்பிடுகின்றார்கள்.
குறிப்பாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த மோகம் வேகமாக பரவி வருகிறது. இவை உடல் நலத்துக்கு ஏற்றதல்ல என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்தாலும் யாரும் இதைக் கண்டுக்கொள்வதில்லை. இதனால் பிரபல நிறுவனங்களுக்கு தான் வருவாய் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.


இது தொடர்பாக அமெரிக்காவின் உள்ள மினிசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சிங்கப்பூரில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் பாஸ்ட் புட் உணவு வகைகளை சாப்பிடுவதால் நீரிழிவு,  ஏற்படுவதாக கண்டுபிடித்துள்ளனர்.

இந்த உணவை வாரத்தில் 2 தடவை சாப்பிடும் போது 27 சதவீதம் நீரிழிவும், 56 சதவீதம் இருதயம் தொடர்பான பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் “நூடுல்ஸ்” இந்த அளவிற்கு பாதிப்பு தராது எனவும் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv