அம்மா நீ மட்டும்...


எல்லா மழலையர்களும்
மலர்களோடு,
பள்ளி சென்ற போது
என் பையில் மட்டும்
தட்டோடு அனுப்பினாய்.
எல்லா மாணவர்களும்
சினிமா...சிகரெட்
என்று அலைந்த போது,
எனக்கு மட்டும்,
புத்தகங்களை
நண்பர்களாக்கினாய்.

அம்மா,
எல்லோரும்
வேலை வேலை என்று
தேடி அலைந்த போது,
என்னால் மட்டும்,
அவர்களுக்கு
வேலை கொடுக்க வைத்தாய்.
என்னைப் பறக்க வைத்தாய்
நானும் பறக்கிறேன்.
அம்மா,
எனக்கு மட்டும்
உன் சிறகுகளையும்
கொடுத்து விட்டு
நீ மட்டும்,
கீழேயே தங்கி விட்டாயே ?                       செல்வராஜ் 

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv