இன்று மாலை பூமியை நெருங்கி வரும் சிறிய கோள்


விஞ்ஞானிகளே எதிர்பார்த்திராத வகையில் இன்று சிறிய கோள் ஒன்று பூமியின் அருகில் வருகின்றது. இதற்கு “2012- LZI” என்று பெயரிட்டுள்ளனர்.
ஸ்லூ என்ற விஞ்ஞானக்கூடத்தில் உள்ள விண்வெளிப் ஒளிப்படக்கருவி மூலமாக இச்சிறுகோள் பூமிக்கு அருகில் வருவதை http://events.slooh.com/என்ற இணையதளத்தில் இலவசமாகக் காணலாம்.


இன்று மாலை 4.30 முதல் 7.30 வரை நடைபெறும் இந்த ஒளிபரப்பில் ஸ்லூவின் பேட்ரிக் பவுலுச்சியும் வானவியல் இதழாளர் பாப் பெர்மனும் இச்சிறுகோள் குறித்து உரையாட உள்ளனர்.

இந்தச் சிறுகோள் 620 மீ முதல் 1.4 கி.மீ (2000 – 4500 அடி அகலம்) பரப்புடையது. ஒரு நகரத்தின் அளவுதான் இக்கோளின் பரப்பளவாக காணப்படுகிறது.

சந்திரன் சுற்றிவரும் தூரத்தை விட 14 மடங்கு அதிகமான தூரத்தை இச்சிறுகோள் சுற்றி வரும். இச்சிறுகோளை LINEAR எனப்படும் பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள் லிங்கன் ஆராய்ச்சி மையமும் NEA எனப்படும் பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள் மையமும் கண்டுபிடித்து இதற்கு 2002 AM31 என்று பெயர் சூட்டினர்.

பூமிக்கு அருகில் 4.65 மில்லியன் மைல் தொலைவில் வரும் இச் சிறுகோள் 500 அடி அகலம் உடையது. இதன் அளவாலும் தொலைவாலும் இதனை பூமிக்கு அருகில் உள்ள பொருள் (near – earth object) என்கிறார்கள்.

இன்று பூமிக்கு அருகில் வரும் 2002 AM31 என்ற சிறு கோளைப் போல் சுமார் 9000 கோள்கள் உலவுகின்றன.

இவை எந்த நேரத்திலும் பூமிக்கு அருகில் வந்து செல்லலாம். இன்று வரும் சிறுகோள் பூமியிலிருந்து 13.7 நிலவுத் தொலைவில்தான் உள்ளது.

இதுபோல மற்றொன்று (LZI) யூன் மாதத்தின் இடையில் திடீரென்று பூமிக்கு அருகில் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv