என்னிதயத்தை திருடுவான்!


என் அன்பு எனக்காக
பேசியவற்றை சேமிக்கின்றேன்
ஒவ்வொரு தடவையும்
அவன் இதழ்களில்,

இதமாய் தழுவி
வெளியேறும் சொற்களையும்
நான் பக்குவமாய் பொறுக்கி
வெய்யிலில் உலரவைத்து,

அழகாய் விரித்து
புத்தகங்களுக்கிடையே
மயில் இறகுகளுடன்
ஒன்றை விட்ட பக்கங்களில்
விரித்து வைத்து மூடி பாதுகாத்து,


அதற்கு என் சுவாசக்காற்றை
காவல் அமர்த்தி
அதற்கு துணையாய்
அவனிடம் பெற்ற ரகசியங்களையும்
உக்கார்த்தியுள்ளேன்,

குட்டி போடப் போட
கட்டுக்குலையாமல்
தூக்கி இதயவறைக்குள்
காற்று அணுகாமல் இறுக்க
வைத்து பூட்டியுள்ளேன்!
பூட்டுக்கு பூவால் சாவி செய்து
காயங்கள் வந்திடாமல்
கண்ணீரை பன்னீராய்
தினம் மூன்று தடவை
மருந்தாக்கிகொள்ளுகின்றேன்
சில சமயத்தில் அவனே
என்னிடம் கல்லறை வரக் கேட்டால்
அனுமதி கொடுத்திட கொஞ்சம்
தயங்குவேன் அவன் திரும்பவும்
என்னிதயத்தை திருடுவான்.              
                                                                           ரூபி 

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv