தாமதமாக பிறக்கும் குழந்தைகள் புத்திசாலியாக இருப்பார்களா?


சில நேரங்களில் கர்ப்பிணிகளுக்கு குழந்தையை பிரசவிப்பதில் காலம் தாமதம் ஏற்படும். அப்போது அதற்காக கவலைப்பட தேவையில்லை என்று மருத்துவர்கள் அறிவுரை கூறுவார்கள்.
அது உண்மையில் சரியான யோசனை என்பதை அமெரிக்காவில் சிகாகோவை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் ஆமோதிக்கிறார்கள்.


பொதுவாக 37-38 வாரங்களில் அநேக குழந்தைகள் பிறந்து விடும். ஒரு சில குழந்தைகளே ஓரிரு வாரங்கள் தாமதமாக பிறக்கின்றன.

இதுதொடர்பாக அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், குழந்தை தாமதமாக பிறக்கும் போது அந்த இடைவெளி காலத்தில் அதன் மூளை வளர்ச்சி பெறுவதாகவும், அதனால் அது கூடுதல் அறிவு ஆற்றல் பெற்று வருங்காலத்தில் புத்திசாலியாக திகழும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

இருப்பினும் இந்த வேறுபாடு சிறிது அளவே இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

முகப்பு Print Send Feedback

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv