சமையல் எரிவாயு இன்று நள்ளிரவு முதல் விலை குறைப்பு


இலங்கையில் சமையல் காஸின் விலை 150 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என நிதியமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
லித்ரோ எனப்படும் அண்மையில் அரசாங்கத்தால் பங்கு கொள்வனவு செய்யப்பட்ட எரிவாயு நிறுவனவே இந்த விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.


சர்வதேச சந்தையில் நிலவும் கனிய எரிபொருட்களின் விலை வீழ்ச்சி எதிர்காலத்தில் இலங்கையிலும் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இலங்கை அரசாங்கம் இதனை எவ்வாறு கையாளும் என்ற விதத்தில் சந்தேகம் நிலவுகிறது.

கடந்த 4 மாதங்களில் சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைவடைந்து வரும் விகிதாசாரத்திற்கு அமையவே உள்நாட்டில் விலைகுறைப்புகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை அரசாங்க கனியவள அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv