விரைவில் வருகிறது!


அப்பிள் வெளியிட்டுள்ள அனைத்து ஐ பேட் மாதிரிகளும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதைக் கருத்தில் கொண்டு விலை குறைந்த சிறிய ஐ பேட் ஒன்றினை அப்பிள் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது ஐ பேட் மினி எனப் பெயரிடப்படலாம் எனத் தெரிகின்றது.


இவ்வருட இறுதியில் இச் சிறிய வகை டெப்லட் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுமெனத் தெரியவருகின்றது.

சந்தையில் குறைந்த விலை அண்ட்ரோய்ட் டெப்லட்களின் ஆதிக்கத்தினைக் குறைக்கும் பொருட்டே இதனை அப்பிள் அறிமுகம் செய்யவுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னரே கூகுள் தனது முதல் டெப்லட்டான Nexus 7 ஐ அறிமுகப்படுத்தியது.

இதுவும் குறைந்த விலை டெப்லட்டாகும்.

அப்பிள் வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் ஐ பேட் மினியானது 7 அல்லது 8 அங்குலத்திரையைக் கொண்டிருக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் ஐ பேட் கொண்டுள்ள 9.7 அங்குல ரெட்டினா திரையைக் கொண்டிருக்காது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ரெட்டினா திரைக்குப் பதிலாக சார்ப் நிறுவனத்தின் IGZO (indium gallium zinc oxide) display உபயோகப்படுத்தப்படலாம் என நம்பப்படுகின்றது.

இது மிக மெல்லிய, அதி நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட திரையென்பதுடன் ஒப்பீட்டளவில் விலையும் குறைவு.

குறைந்த விலையில் வழங்கும் பொருட்டே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

இதன் விலை சுமார் 299 அமெரிக்க டொலர்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐ பேட் மினியின் மற்றைய தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ஆனால் ஐ பேட் மினியின் தயாரிப்புப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாகத் தெரிகின்றது.

எனினும் அப்பிள் குறைந்த விலை டெப்லட்டினைத் தயாரிக்கும் முடிவினை அந்நிறுவனத்தின் மறைந்த ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் எதிர்த்தார்.

ஆனால் தற்போது அவர் மறைந்த பின்னர் குறைந்த விலை டெப்லட்டினை தயாரிக்கும் முடிவினை அப்பிள் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ___

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv