விண்டோஸ் 8 விரைவில் வெளியாகிறது!


விண்டோஸ் 8 இயங்குதளமானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுமென மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது.

விண்டோஸ் 8 இயங்குதளமானது விற்பனையில் சாதனை புரியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.


மைக்ரோசொப்டின் வரலாற்றில் அதன் மற்றைய இயங்குதளங்களுடன் ஒப்பிடும் போது மிகப்பெரிய மாறுதல்களுடன் வெளியாகும் இயங்குதளமாக விண்டோஸ் 8 கருதப்படுகின்றது.

புரட்சிகரமான மெட்ரோ யு.ஐ இனைக் கொண்டதுடன், புதுமையான பல வசதிகளையும் கொண்டுள்ளது.

இதன் பீட்டா தொகுப்பு ஏற்கனவே வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

தனது இறுதி வெளியீடான விண்டோஸ் 7 ஐ விட 8 ,பல மடங்கு திறன் வாய்ந்தது என மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது.

டெஸ்க்டொப் கணனிகள் மட்டுமன்றி டெப்லட், லெப்டொப் ஆகியவை இயங்கும் வகையிலேயே விண்டோஸ் 8 உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தொடுதிரைகளைக் கொண்ட சாதனங்களுக்கு இது இன்னும் சிறப்பாக செயற்படுமென மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv