13 மாவட்டங்களில் கடும் வரட்சி


உரிய மழைவீழ்ச்சி இன்மையால் நாட்டின் 13 மாவட்டங்களில் கடும் வரட்சி நிலவுவதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அம்பாறை, குருநாகல், நுவரெலியா, கண்டி, கேகாலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம், மன்னார், மொனராகலை மற்றும் புத்தளம் போன்ற மாவட்டங்களிலேயே கடும் வரட்சி நிலவுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில், மேற்படி மாவட்டங்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மாவட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார். (திலினி டி சில்வா)

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv