இத்தாலி – அயர்லாந்து – அமெரிக்க பழமொழிகளின் தொகுப்பு..


இத்தாலி – அயர்லாந்து – அமெரிக்க பழமொழிகளின் தொகுப்பு..
இத்தாலி
01. சேவல் மௌனமாகவும் கோழி கூவும்படியாகவும் உள்ள வீடு துன்பகரமானது.
02. குழந்தை கேட்கும் ஏன் என்ற கேள்விதான் தத்துவத்தின் சாவி.
03. ஒரு சிறிய உண்மை முழுப் பொய்யையும் நம்பச் செய்துவிடுகிறது.

04. எடுத்துக் கொள்பவனுக்கே உலகம் சொந்தம்.
05. சாபங்கள் ஊர்வலம் போல எங்கே தொடங்கியதோ அங்கே முடிவடையும்.
06. மெல்லிய ஆடைகளை பெட்டிகளில் அணியாமல் வைத்திருப்பவர்கள் முரட்டு ஆடைகளை அணிய வேண்டியதுதான்.
07. உலகம் என்பது பெரிய புத்தகம் எப்படிப் படிப்பது என்று தெரியாதவனுக்கு அது சிறிதே பயன்படுகிறது.
08. ஆன்மா இறைவனுக்கு சொந்தம், உடம்பு மண்ணுக்கு சொந்தம், சொத்து யாருக்கு சொந்தம் ?
09. மூடன் தன்னுடைய செலவில் கற்கிறான், அறிஞன் மற்றவரின் செலவில் கற்கிறான்.
10. கடவுள் துணை இருந்தால் சிலந்தி வலையும் சுவராகிறது, கடவுள் கிருபை இல்லாவிட்டால் சுவரும் சிலந்தி வலையாகிறது.
11. மெதுவாகப் பேசுகிறவன் பத்திரமாகப் பேசுகிறான், தூரமாகவும் பேசுகிறான்.
12. உண்மைதான் அடிக்கடி தண்டிக்கப்படுகிறது.
13. வேலை செய்பவனுக்கு ஒரு சட்டை வேலை செய்யாதவனுக்கு இரு சட்டைகள்.
14. அதிர்ஷ்டம் என்பது ஒரு பசுமாடு அது சிலருக்கு மட்டுமே முகத்தைக் காட்டுகிறது.
15. அறிவுடமை அழிந்து போவதில்லை, அறிவாளிகள் அழிந்து போகிறார்கள்.
16. கூரிய முனை கொண்ட நெருஞ்சி முள்தான் விரைவாக வளருகிறது.
17. சிவந்த மை பூசிய பெண்கள் வெட்கப்படாதவர்களாகவும் இருக்கலாம்.
18. விரும்பியதைப் பெற முடியவில்லையானால் பெற்றதையே விரும்புவோமாக.
19. வறுமை அழகைச் சிதைக்காது.
20. உலகம் எல்லாம் இருப்பது ஒரே ஒரு தேசம்தான்.
அயர்லாந்து :
21. பொய்யன் வீடு தீப்பற்றி எரிந்தாலும் அச்செய்தியும் பொய்யாகிவிடும்.
22. கேட்டால் ஒழிய யோசனை கூறாதே.
23. எவன் ஒருவன் புகழை வெறுக்கிறனோ அவனுக்கு புகழ் தானாக வந்து சேரும்.
24. நாளை கிடைக்க இருக்கும் கோழியைவிட இன்று கிடைக்கும் முட்டை மேலானது.
25. முட்டாளுடன் விருந்துண்பதைவிட அறிவாளியுடன் கூலி வேலை செய்வது மேலானது.
26. அடிமை போல உழைத்திடு அரசன் போல வாழ்ந்திடு.
27. புலால் இருக்கும்போது பசி இல்லை பசி இருக்கும் போது புலால் இல்லை.
28. மூடின பாலில் ஈ விழாது.
29. நமக்கு பாரமாக இருப்பவரை மன்னிக்கலாம் ஆனால் நாம் மற்றவருக்கு பாரமாக இருப்பதை மன்னிக்க முடியாது.
30. மக்களாட்சி என்பது அரசை ஆள்பவர்களும் எதிர்ப்பவர்களும் இணைந்து இழுத்து செல்லும் வண்டியைப் போன்றது.
அமெரிக்கா
31. தோல்வி ஏற்படும் நேரத்தில் மாவீரர்கள் உருவாகிறார்கள். ஆகவே தொடர்ச்சியாக பல பெரிய தோல்விகளே வெற்றியாக வர்ணிக்கப்படுகிறது.
32. இந்த வாழ்வில் நுழைவதற்கு ஒரு வழியைத்தவிர வேறு வழியில்லை. ஆனால் மரணத்தின் வாயில்களோ எண்ணிலடங்காமல் இருக்கின்றன.
33. ஒரு மனிதனை நீ மன்னிக்கும் ஒவ்வொரு பொழுதும் அவனைப் பலப்படுத்தி உன்னையும் பலப்படுத்திக் கொள்கிறாய்.
34. செயலே புகழ் பேசும்.
35. உண்மை எல்லாச் சமயங்களிலும் பேசப்படுவதற்கல்ல.
36. ஒரு பொருளின் இன்றியமையாமை அது தேவைப்படும்போதுதான் தெரியும்.
37. வெறுமையான பையால் நேராக நிற்க முடியாது.
38. வலிமை வாய்ந்த நண்பன் வலிமை மிகுந்த எதிரியாக மாறுவான்.
39. ஒரு பறவையையும் கூண்டையும் நீ விரும்பினால் முதலில் கூண்டை வாங்கு.
40. ஆலயத்திற்கு அருகில் இருப்பவன்தான் தொழுகைக்கு கடைசியாக வருவான்.
41. உன்னிடம் வம்பளப்பவன் உன்னைப்பற்றியும் வம்பளப்பான்.
42. நம்முடைய அறிவுரையை ஏற்காதவரை வெறுக்கிறோம் ஏற்பவரை வஞ்சிக்கிறோம்.
43. தீயோர் நேசத்தைவிட தனிமை மேலானது.
44. ஆபத்தும் இல்லை புகழும் இல்லை.
45. தள்ள முடியவில்லையானால் இழு அதுவும் முடியவில்லை என்றால் விட்டுவிட்டுப் போ.
46. அதிட்டம் தைரியத்திற்கு சலுகை புரிகிறது.
47. பொதுவான விதி ஒவ்வொன்றுக்கும் ஒரு விதி விலக்கும் உண்டு.
48. மேதைத்தன்மை எவருக்கும் பரம்பரை உரிமையல்ல.
49. உடையவனின் பாதம் வயலுக்கு உரம்.
50. ஒருவரை தண்டிப்பதைவிட தயவு காட்டுவது அதிக வல்லமையுடையது.
51. உடலையும் ஆன்மாவையும் ஒன்றாகவே வைத்திரு.
52. பல் இல்லாவிட்டாலும் கூட கலைமானால் சில காரியங்களை சாதிக்க முடியும்.
53. கோவிலுக்கு அருகாமை கடவுளுக்கு வெகு தூரம்.
54. சிறு செலவுகள் முழுச் செல்வத்தையும் விழுங்கும்.
55. ஒரு மனிதனுக்கு உணவு மற்றவருக்கு நஞ்சு.
அலைகள் வாராந்தப் பழமொழிகள்

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv