யாழ் பல்கலை மாணவர் பாதுகாப்பு கோரி போராட்டம்! பாதுகாப்புத் தரப்பினர் குவிப்பு!-கணொளி இணைப்பு

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.


யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் யாழ்.கலட்டிச் சந்தியில் வைத்து இன்று காலை இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டார்.இதனைக் கண்டித்தும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு வழங்கக் கோரி மாணவர்கள் துணைவேந்தரது அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நூற்றுக்கணக்கில் ஒன்று கூடிய மாணவர்கள் துணைவேந்தருக்கு எதிராக கோஷங்களை எழப்பியதோடு துணைவேந்தரது அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை கல் வீசி தாக்கினார்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv