மறுபிறவியிருந்தால்......


அன்புள்ள...
இதயங்களுக்கே...
அழவைக்கும் உரிமை உண்டு...
அடிக்கடி...
நீ சொன்னது மட்டுமல்ல...
நானும் அனுபவிப்பது ...
எனக்காக நீயும்...
உனக்காக நானும்...
காத்திருந்தோம் ...

ஆனால்....
காலம் நமக்காக ...
காத்திருக்க வில்லையே....
எனக்காக ...
நீ வரைந்த...
மடல்களுக்காய் காத்திருந்தேன்...
உனக்காக...
விதிவரைந்த செய்தி...
செய்தியாக....
எனை வந்து சேரும்வரை ....
கண்களில்....
வளர்த்துவைத்த....
கற்பனைகள் யாவும்....
கானலாகி ....
கண்ணீராய் ...
கரைந்துபோனதே ....
நீ இல்லாது தவிக்கும்....
இந்தப்பிறவி போல் ....
இன்னொரு பிறவிவேண்டாம் ....
மறுபிறவி ஒன்றிருந்தால் ....
அதில் நீ என்....
சுவாசமாக இருக்க வேண்டும்
ஏனெனில்....
நீ எனை பிரியும் போதே....
நானும் இறந்துவிடுவேன் ..
                                             நினைவுகள்

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv