ஜூலை மாதம் உலக அளவில் 3 லட்சம் பேர் இணைய இணைப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள்

திர்வரும் ஜூலை மாதம் உலக அளவில் குறைந்தது 3 லட்சம் பேர் இணைய இணைப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள் என அமெரிக்க நாட்டின் புலனாய்வுத் துறை(FBI) எச்சரித்துள்ளது.
தாங்கள் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறோமா என்பதனை அறிந்து கொள்ள, புலனாய்வுத் துறை dcwg.org என்ற முகவரியில் ஓர் இணையத்தளத்தினை அமைத்துள்ளது.

இத்தளத்திற்கு சென்று உங்களது கணணி மால்வேர் வைரஸ் புரோகிராமினால் பாதிக்கப்பட்டுள்ளதா எனக் கண்டறிந்து, அதற்கான தீர்வையும் பெறலாம்.
டி.என்.எஸ் சேஞ்சர்(DNS Changer) மால்வேர் என அழைக்கப்படும் இந்த வைரஸைப் பரப்பியவர்கள், பல லட்சம் டொலர் பணத்தை இதன் மூலம் ஏமாற்றி சம்பாதித்துள்ளனர்.
இந்த வைரஸ் பாதித்த கணணி மூலம் இணைய இணைப்பில் செல்கையில், இந்த வைரஸ் நாம் காண விரும்பும் தளத்திற்குப் பதிலாக வேறு ஒரு தளத்திற்கு நம்மை இழுத்துச் செல்லும்.
அங்கு நம் ஆசையையும், ஆர்வத்தினையும் தூண்டும் வகையில் வாசகங்கள் தரப்பட்டு மேலும் சில லிங்க்குகள் தரப்படும்.
இதில் கிளிக் செய்து மாற்றிக் கொள்பவர்களின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் திருடப்பட்டு, அதன் மூலம் பண மோசடியும் மேற்கொள்ளப்படும். மேற்கொள்ளப்பட்ட மோசடியின் மதிப்பு ஒரு கோடியே 40 லட்சம் டொலர் என எப்.பி.ஐ மதிப்பிட்டுள்ளது.
இந்த மால்வேர் பாதிப்பினை நீக்கும் கிளீன் சேவையை எப்.பி.ஐ இதற்கென அமைத்த இணையத்தளம் தருகிறது. அப்படியும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவில் 3 லட்சம் பேர் இதனால், பாதிப்படைந்தவர்களாகவே இருப்பார்கள்.
ஜூலை மாதம் இவர்களால் தாங்கள் விரும்பும் இணையத்தளங்களுக்குச் செல்ல முடியாது என எப்.பி.ஐ செய்தியாளர் ஜென்னி தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv