தமிழ் பழமையானதா

இதுவரைக்கும் கிடைத்த கல்வெட்டு தடயங்களில் மிக முந்தையது தமிழ் மொழியில் உள்ள கல்வெட்டுகளே. கி.பி. 350 வாக்கில் உள்ள சமசுகிரத கல்வெட்டுக்களே இதுவரைக்கும் கிடைத்துள்ளன.

பல்லவ மன்னர்களின் காலத்தில் மொழிபெயர்ப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு திராவிட மொழிகளில் இருந்த நூல்கள் அனைத்தும் சமசுகிரத மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


பல்லவர்கள் காலத்தில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளில் ஆரம்ப கலத்தில் வடமொழியும், இடைபல்லவர்கள் காலத்தில் சமசுகிரத மொழியும், கடைசி காலத்தில் கிராந்தம் கலந்த தமிழும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

பல்லவர்களின் காலம் சுமார் கி.பி 400ல் இருந்து 8ம் நூற்றான்டு வரையாகும். அவர்கள் காலத்தில் தான் இந்து மதம் தமிழ்நாட்டில் பெரும் எழுச்சிப் பெற்றது. அதற்கு முன் தென்தமிழகத்தில் சமணமும், வட தமிழகத்தில் பௌத்தமும் வேரூன்றியிருந்தது.

அதன் பிறகு வந்த மன்னர்கள் தமிழை விட சமசுகிரதமே உயர்ந்தது என்ற எண்ணத்தில் மயங்கி இருந்ததனர்.

வேதங்கள் வாய்மொழியாக தான் சந்ததியினருக்கு வழங்கப்பட்டது. சமசுகிரதத்திற்கு ஆரம்பத்தில் வரிவடிவம் இல்லை. கி.பி 4ம் நூற்றாண்டிலேயே அதற்கு வரிவடிவம் கொடுக்கப்பட்டது.

தமிழுக்கு அதற்கு முன்னரே வரிவடிவம் உள்ளது. நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது.

சிந்து சமவெளி காலத்தில் அதாவது கி.மு 1350 களில் இந்திய துனைக் கண்டம் முழுவதும் ஒரே திராவிட மொழி பேசி வந்தனர். பின்பு கி.மு 10ம் நூற்றாண்டு வாக்கில் அம்மொழி பாகதம் என்றும் தமிழ் என்றும் இரண்டாக பிளவுபட்டது.

பாகத மொழியின் வரிவடிவம் பிராமி. தமிழ் மொழியின் வரிவடிவம் தாமிழி. ஆனால் தாமிழியை இன்று தமிழ் பிராமி என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

பாகதத்தில் இருந்து வட மொழிகளும், தமிழிலிருந்து தென் திராவிட மொழிகளும் உருவாகின.

பிராமியின் சீர்செய்த வரிவடிவமே தேவநகரி. இதைதான் சமசுகிரத மொழியை எழுத பயன்படுத்திவருகின்றனர். இது கி.பி 4 நூற்றாண்டில் உருவானது.

தமிழில் உருவான தொல்காப்பிய இலக்கண நூல் இடைச்சங்க காலத்தில் உருவாக்கப்பட்டது. இலக்கண நூல் உருவாக்கப்பட்டது என்றால் அந்த மொழி பல ஆண்டுகளாக வழக்கில் இருந்து செம்மைப்பட்டிருக்க வேண்டும். அப்படி பார்த்தால் கி.மு 10 ம் நூற்றாண்டுக்கு முன்னரே அது வழக்கில் இருந்திருக்க வேண்டும்.

தமிழ் மொழி கி.மு 10ம் நூற்றாண்டிலேயே நன்கு வளர்ச்சியடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது. முதற் சங்க காலத்திலேயே இலக்கண நூல் வகுத்து தமிழ் பா இயற்றியிருக்கிறார்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv