நந்தன வருட புத்தாண்டுப் பலன்கள்

நந்தன வருட புத்தாண்டுப் பலன்கள்


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

பொதுப் பலன்
குடும்பத்தில் இதுவரை ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். அத்தோடு விளையாட்டுத் துறையிலும் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வீடு, நிலம், வாகனம் யோகம் அமையும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு வேலையில் நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம். இடையிடையே பணப்பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும்.


பெண்கள்
புதிய ஆடை, ஆபாரணங்களில் சேர்க்கை உண்டாகும். நிம்மதியும் சந்தோசமும் அதிகரிக்கும். தொழில் ஸ்தானத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

பொருளாதாரம்
இடையிடையே பணத்தட்டுப்பாடு இருந்தபோதிலும் கூட பொருளாதார நிலை சீராக அமையும்.

ஆரோக்கியம்
ஆண் - பெண் இருவருக்கும் உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியத்தில் அவதானம் எடுக்கவும்.

பரிகாரம்
முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துவர குடும்ப வாழ்க்கையில் உள்ள இன்னல்கள், பாதிப்புக்கள் நீங்கி நன்மை உண்டாகும்.


கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

பொதுப் பலன்
குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடு, திருமண தடை, நெருங்கிய உறவினர்கள் மூலம் தேவையற்ற பிரச்சினை, பாகப்பிரிவினை என்பன ஏற்பட்டு நீங்கும். எனினும் உங்கள் ராசிக்கு 6ஆம் இடமாகிய துலாம் ராசியில் சனிபகவான் உச்சம் பெற்று விலகுவது நல்ல யோக பலனைத்தரும். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் நல்ல முறையில் அமையும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி துறையில் லாபம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் உள்ள தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும்.

பெண்கள்
குடும்பத்தில் மனஸ்தாபம் உண்டாகும். தொழில் நிலையில் ஈடுபாடு குறையும். எதிலும் உற்சாகத்துடன் செயற்படுதல் நல்ல பலனைத் தரும்.

பொருளாதாரம்
செலவுகள் அதிகரித்து பணத்தட்டுப்பாடு ஏற்படும். திட்டமிட்டு செலவு செய்தல் நன்மையைத் தரும்.

ஆரோக்கியம்
இரத்த அழுத்தம், நரம்பு சம்மந்தமான உபாதைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரம்
அம்மன் கோயிலுக்கு சென்றுவர வாழ்வில் சுபிட்ஷம் உண்டாகும்.
மிருகசிரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

பொதுப் பலன்
சிறு காரியங்களுக்குக் கூட வீண் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் குழப்பமான நிலை ஏற்படும். தொழில் நிலையில் போட்டிகள், இடமாற்றம் ஏற்படும். கொடுக்கல், வாங்கல்களில் சிக்கல் ஏற்படும். மாணவர்கள் கல்விநிலையில் எதிர்பார்த்த முன்னேற்றத்தைப் பெறுவர். வியாபாரத்தில் மந்தமான நிலை உருவாகும். குடும்பத் தலைவருக்கு குடும்ப சுமை அதிகரிக்கும். எதிர்பார்ப்புக்கள் அநேக தடைகளுக்குப் பின் நிறைவேறும்.

பெண்கள்
கணவன் - மனைவி, குழந்தைகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். உடல், உள சோர்வினால் வீட்டு நிர்வாகத்தை சரிவர கடைப்பிடிக்க முடியாமை.

பொருளாதாரம்
செலவுகள் அதிகரிக்கும், பணத்தட்டுபாடு ஏற்படும் திட்டமிட்டு செலவு செய்;தால் பணபற்றாக்குறை ஏற்படாது.

ஆரோக்கியம்
சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும்.

பரிகாரம்
வியாழக்கிழமையன்று ஆஞ்சநேயரை வணங்கிவர நன்மை உண்டாகும்.
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்

பொதுப் பலன்
செல்வம், புகழ், அந்தஸ்துடன் கூடிய நிறைவான வாழ்க்கை அமைதல். தாய், தகப்பன், சகோதரர்கள் மூலம் நன்மை ஏற்படுதல். பணவருவாய் சிறப்பாக அமைதல். மேற்கல்வியைத் தொடர வாய்ப்புக்கள் கிடைத்தல். ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். வண்டி, வாகன யோகம் உண்டாகும். புதிய வியாபாரம் ஆரம்பிப்பதற்கான வழிவகைகள் கிடைத்தல். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். நண்பர்களின் மூலம் உதவி கிடைக்கும்.

பெண்கள்
திருமண யோகம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரக்கூடிய சம்பவங்கள் நடந்தேறும்.

பொருளாதாரம்
தேவைக்கேற்ப பணவரவு கிடைக்கும்.

ஆரோக்கியம்
பொதுவான ஆரோக்கியம் உண்டு.

பரிகாரம்
தினமும் சூரிய பகவானை வழிபட்டு வருவதால் நன்மை உண்டாகும்.
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

பொதுப் பலன்
வழக்குப் பிரச்சினைகள் சுமூகமாக முடிவடையும். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். வண்டி, வாகன யோகம் உண்டாகும். வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும். அலைச்சல் அதிகமாகும். நண்;பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஏற்றுமதி - இறக்குமதி துறையில் லாபம் உண்டாகும். தாய் வழியில் நன்மை கிடைக்கும். கல்வி மற்றும் ஏனைய துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கணவன் - மனைவி வழியில் நன்மை உண்டாகும்.

பெண்கள்
புகுந்த வீட்டில் நன்மை உண்டாகும். குழந்தைகள் மூலம் நன்மை உண்டாகும். தொழில் ஸ்தானத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும்.

பொருளாதாரம்
திட்டமிட்டு செலவு செய்வதால் அனாவசிய செலவுகளைத் தவிர்க்கலாம். பணவரவு மத்திம நிலையில் இருக்கும்.

ஆரோக்கியம்
பொதுவான ஆரோக்கியம் உண்டு.

பரிகாரம்
சிவனை வழிபட்டு வருவதால்; குடும்பத்தில் ஏற்பட்ட குறைகள் நீங்கி சுபிட்ஷம் உண்டாகும்.

உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2 ஆக 9- பாதங்கள்.

பொதுப் பலன்
சனி வக்ர நிவர்த்தி அடைவதால் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். தொழில் ஸ்தானத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் மற்றும் தடுமாற்றங்கள், சோர்வு, பயம் உங்களைவிட்டு போகும். கல்வியில் மாணவர்களுக்கு மந்தநிலை உருவாகும். எனவே முயற்சியுடன் செயற்படுவதன் மூலம் நல்ல பெறுபேறுகளைப் பெறலாம்.

பெண்கள்
உறவினர்களிடையே உங்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கும். இறைவழிபாடுகளில் நாட்டம் அதிகரிக்கும்.

பொருளாதாரம்
தேவைகள் அனைத்தும் சம்பூர்ணமாகும்.

ஆரோக்கியம்
மருத்துவ செலவுகள் ஏற்பட்டு நீங்கும்.

பரிகாரம்
சிவபெருமானையும் பைரவரையும் வழிபட்டு வருவதன் மூலம் பாதிப்புக்கள் குறைந்து நன்மை உண்டாகும்.
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3, ஆக 9- பாதம்.

பொதுப் பலன்
கணவன் - மனைவி உறவில் விட்டுக் கொடுத்து வாழ்வது உத்தமம். சனி வக்ர நிவர்த்திக்கு பிறகு பெரிய மாற்றமும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். ஆண் - பெண் இருவருக்கும் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். குரு பார்ப்பதால் ஏழரை சனியின் தாக்கம் குறையும். எல்லா விடயத்திலும் மிக கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். மாணவர்கள் பாடசாலை வட்டத்தில் பொறுப்புக்கள் அதிகரித்து மேன்மை நிலையை அடைவர்.

பெண்கள்
சமுதாயத்தில் நல்லபெயர், புகழ், அந்தஸ்து, மரியாதை என்பன கிடைக்கும்.

பொருளாதாரம்
பொருளாதார நிலை சீராக அமையும்.

ஆரோக்கியம்
உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு நீங்கும்.

பரிகாரம்
துர்க்கை அம்மனை தினமும் மெய்யன்புடன் வழிபட்டுவர ஐஸ்வர்யம் பெருகும்.
விசாகம் 4, அனுஷம், கேட்டை முடிய ஆக 9 பாதங்கள்.

பொதுப் பலன்
குடும்பத்தில் இலாப, நஷ்டங்கள் தொடர்ந்து வரும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை நிலவும். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். வீடு, நிலம், வாகன யோகம் உண்டாகும். குரு பெயர்ச்சிக்கு பின்னால் அனைத்து யோகமும் கிடைக்கும். தொழில் நிலையில் கடின முயற்சியினால் மட்டுமே இலாபம் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2ஆம் மற்றும் 7ஆம் இடங்களுக்கு சுக்கிரன் அதிபதியாக விளங்குவதால் இந்த புத்தாண்டு சிறப்பான புத்தாண்டாக அமையும்.

பெண்கள்
புதிய ஆடை, ஆபரணங்களில் சேர்க்கை உண்டாகும். நீண்டநாள் தடைப்பட்டு வந்த திருமணம் கைக்கூடும். வேலை பார்க்கும் பெண்கள் உற்சாகமாக செயல்படுவார்கள்.

பொருளாதாரம்
பணத்தட்டுபாடு இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஆண்டு முழுவதும் பொருளாதாரம் திருப்தியாக அமையும்.

ஆரோக்கியம்
ஆண் - பெண் இருவருக்கும் உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கவலைப்படும் அளவிற்கு பாதிப்பு ஏற்படாது.

பரிகாரம்
முருகனை தரிசனம் செய்துவர நன்மை உண்டாகும்.
மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் ஆக 9 பாதங்கள்.

பொதுப் பலன்
குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதர, சகோதரி வழியில் நன்மை உண்டாகும். தேவைக்கேற்ப பணவரவு அதிகரிக்கும். சில வழக்கு சண்டைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகுதல். தூர பிரயாணங்கள் அதிகரிக்கும். மாணவர்களின் கவனயீனத்தினால் தோல்விகள் அதிகரித்தல். உடல்சோர்வு, மனஅலைச்சல் உண்டாகுதல். புதிய இடமாற்றம், தொழில் மாற்றம் உண்டாகும்.

பெண்கள்
நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

பொருளாதாரம்
வரவை விட செலவு அதிகமாக இருப்பதால் சிக்கனத்தில் கவனம் தேவை.

ஆரோக்கியம்
தலைவலி, உடல்வலி அடிக்கடி ஏற்படக்கூடும்.

பரிகாரம்
முருகன் ஸ்தலத்திற்கு சென்று வழிபட்டு வர பாதிப்புக்கள் குறைந்து நன்மை உண்டாகும்.
உத்திராடம் 2, 3, 4 திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதம் ஆக 9 பாதங்கள்.

பொதுப் பலன்
சமூகத்தில் அவப் பெயர்களை சம்பாதிக்க நேரிடும். கடன் பிரச்சினைகள் அதிகரிக்கும். அயலாருடன் வீண்விவாதங்கள் ஏற்படும். விலை மதிக்க முடியாத பொருட்கள் சேதம் அடைதல். நிம்மதி குறைதல். மாணவர்களின் கல்வி நிலையில் மோசமான நிலை உருவாகுதல். வேண்டாத சகவாசத்தினால் பிரச்சினைகள், தொல்லைகள் ஏற்படுதல். தொழிலில் அதிக வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும் அநேக தடைகளுக்கு பின்னரே அவை சம்பூர்ணமாக கிடைக்கும்.

பெண்கள்
திருமணத் தடை நீங்கும். புத்திரபாக்கியம் உண்டாகும். எனினும் வீண்செலவுகள் அதிகரிக்கும்.

பொருளாதாரம்
வீண் செலவினால் சேமிப்பு குறையும். பணப்பற்றாக்குறை ஏற்படும்.

ஆரோக்கியம்
அஜீரணக்கோளாறு, உணவில் வெறுப்பு என்பன ஏற்பட்டு நீங்கும்.

பரிகாரம்
நவக்கிரக பூஜை செய்துவர பாதிப்புக்கள் குறைந்து நன்மை ஏற்படும்.
அவிட்டம் 3, 4, சதயம், பூராட்டாதி 1, 2, 3ஆம் பாதம் ஆக 9 பாதங்கள்.

பொதுப் பலன்
குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். சொத்து சம்மந்தமான பிரச்சினைகள் அனைத்தும் முடிவு பெறும். கணவன் - மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். திருமண முயற்சி வெற்றியடையும். பணவரவு உண்டாகும். ஊதிய உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் ஏற்ப்பட்டு வந்த பிரச்சினைகள், குழப்பங்கள் அனைத்தும் தீரும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படக்கூடும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்தவருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். வண்டி, வாகன யோகம் வரும்.

பெண்கள்
கணவன் - மனைவி, குழந்தைகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பெண்கள் வேலையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.

பொருளாதாரம்
செலவுகள் அதிகரிக்கும், பணத்தட்டுப்பாடு ஏற்படும், திட்டமிட்டு செலவு செய்;தால் பணப் பற்றாக்குறை ஏற்படாது.

ஆரோக்கியம்
தேவையற்ற அலைச்சல், குடும்பத்தில் நிம்மதி குறைவு போன்றவற்றால் உடல் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். இரத்த அழுத்தம், நரம்பு சம்மந்தமான உபாதைகள் ஏற்படும்.

பரிகாரம்
பெருமாள் கோவிலுக்கு சென்றுவர நன்மை உண்டாகும்.பூராட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9 பாதங்கள்.

பொதுப் பலன்
குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மனக்கவலைகள் தீரும். தொழில் நிமிர்த்தம் தூரதேச பயணங்கள் உண்டாகும். உடன் பிறந்தார் வழியில் நன்மை உண்டாகும். பணவரவுகள் அநேக தடைகளுக்குப் பின்னரே கிடைக்கும். கல்வி பயில்பவர்களுக்கு நன்மை குறைவான பலன்களே உண்டு. வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். நிதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயற்படுவதனால் நன்மை உண்டாகும்.

பெண்கள்
அயலவர் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

பொருளாதாரம்
செலவுகள் அதிகரிக்கும், பணப் பற்றாக்குறை ஏற்படலாம். வருமானத்திற்கு அதிகமான செலவு அதிகமாகும்.

ஆரோக்கியம்
பொதுவான ஆரோக்கியம் உண்டு.

பரிகாரம்
பெருமாள் கோவிலுக்கு சென்றுவர நன்மை உண்டாகும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv