மீறப்பட்ட வாக்குறுதிகள்: ஐ. நா.வின் தலையீடு தேவை: கூட்டமைப்பு அறிக்கை

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் கவுன்ஸில் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

.
யுத்தம் நிறைவடைந்து இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசு தவறியுள்ளதாகவும் இது தொடர்பில் ஐநா மனித உரிமை கவுன்ஸில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் வேண்டப்பட்டுள்ளது.
.
இலங்கை அரசின் மீறப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் தற்போது இடம்பெறும் வன்முறைகள் பழைய குழப்பமான சூழ்நிலையை நினைவூட்டுவதாக அமைந்துள்ளதென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
இலங்கையில் நல்லிணக்கம், அமைதியை ஏற்படுத்த காலம் தேவை என அரசாங்கம் கூறிவருவதாகவும் ஆனால் வருட காலங்களாக இதையே தொடர்ச்சியாக இலங்கை கூறி வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
.
அதனால் இலங்கையில் அமைதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்த மனித உரிமை கவுன்ஸில் 19வது கூட்டத் தொடரில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
இது தொடர்பில் மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து இலங்கை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. (ஆங்கில வடிவத்தினை வாசிக்க அழுத்துக )

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv