தமிழனும் டமிலும் -மாற்றார் மதிக்குமளவிற்கு நம் தமிழர் தமிழை ஏன் மதிப்பதில்லை??தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்கு இந்தக் கதியா? (காணொளி இணைப்பு )

மாற்றார் மதிக்குமளவிற்கு நம் தமிழர் தமிழை ஏன் மதிப்பதில்லை??தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்கு இந்தக் கதியா? இந்தியை தாய் மொழியாக கொண்ட டில்லிப் பெண் தமிழில் உரையாடுகிறார். ஆனால் தமிழனுக்குத் தமிழில் பேச நாக்கு "றோல் ஆவுது!!"

தமிழ் நாட்டிலேயே ஏறத்தாழ‌ 5% ஆனோர் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாம். எப்படி இருக்கிறது?

தமிழ்நாட்டில் தமிழ்க் கல்வி மற்றும் தமிழ் வழிக் கல்வி ஆகியவற்றின் நிலை பெரும் கவலைக்கிடமாக உள்ளதாகக் கருதப்படுகிறது.

ஆங்கில வழிக் கல்வியின் மீது தமிழக மக்களுக்குள்ள நாட்டமும் நம்பிக்கையும் அவர்களுக்கு தமிழ் மீது இல்லை.

தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை குறைந்துவரும் அதேநேரம் ஆங்கில வழிக் கல்வியை நாடுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

தவிர பள்ளியில் தமிழை ஒரு மொழியாகக் கற்பிக்கும் தரமும் வீழ்ச்சியடைந்து வருகிறது.

மாணவர்கள் தமிழை ஒழுங்காக இலக்கணப் பிழையின்றி பேசுவதும் எழுதுவதுமே இன்று பெரும் சவாலாகி விட்டது.

தமிழின் செம்மொழிச் சிறப்புக் குறித்து தமிழக அரசு மாநாடு நடத்தியுள்ள தற்போதைய நிலையில் தமிழ் சீரழிகிறது

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/12/101205_tamileducationseries.shtml 

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv