முகம் தெரியாத பெண்களுக்கு தொலைபேசி தொல்லை கொடுக்கும் ஆண்களுக்கு இதுவொரு நல்ல பாடம்

மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடியைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவரை அநாமதேயமாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆபாச வார்த்தைகளைப் பேசி அவரை மனோ ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் கிலேசம் அடையச் செய்த நபர் ஒருவர் தான் புரிந்த குற்றத்தை ஒப்புக் கொண்டதின்
பேரிலும் பாதிக்கப்பட்டவரின் கோரிக்கைக்கு இணங்கவும் 50 ஆயிரம் ரூபா மான நஷ்ட ஈடாகச் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடியில் ஞாயிறன்று கூடிய இணக்க சபை, குற்றவாளியான ஏறாவூரைச் சேர்ந்தவரும் தற்போது இரத்தினபுரி பகுதியில் பேஷ் இமாமாகப் பணியாற்றும் ஒருவருக்கே இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

குறித்த நபர் கடந்த வருடம் ஜூன் மாதத்திலிருந்து இந்தப் பெண்ணை முகம் தெரியாத நிலையில் இரவு பகலாக தொலைபேசி மூலம் தொல்லைப்படுத்தி வந்த ஆதாரங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டதன் மூலம் நிரூபிக்கப்பட்டன.

குற்றவாளிக்கு இது நல்லதொரு பாடம் என்றும் இப்படிப்பட்ட துஷ்ட நடத்தை உள்ளவர்களுக்கெதிராக பாதிக்கப்பட்டவர்கள் துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த சம்பவம் உணர்த்தியிருப்பதாக பாதிக்கப்பட்டவரான திருமதி ஜே. எப். காமிலா தெரிவித்தார்.

இணக்கசபை மத்தியஸ்தர்களான மௌலவி யூ. ஏ. அப்துல் மஜீட், மற்றும் திருமதி உதுமாலெப்பை ஹபீலா, ஏ. றாசிக் ஆகியோர் குற்றவாளிக்கு இந்தத் தீர்ப்பை வழங்கி வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
Add Comment

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv