அமெரிக்கா ஐ.நா. பேரவையில் சமர்ப்பித்த இலங்கை தொடர்பான பிரேரணை வெற்றி பெற்றது


ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சற்று முன்னர் சம்ர்ப்பித்த பிரேரணை வெற்றியளித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை தொடர்பில் அமெரிக்கா மிதமான சமச்சீரான பிரேரணை ஒன்றையே ஐநா மனித உரிமை பேரவையில் முன்வைத்துள்ளதாகவும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளை செயற்படுத்த வைப்பதே பிரேரணையின் நோக்கம் எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

யுத்தம் முடிந்து இலங்கை தனது வழியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த 3 வருடங்கள் கால அவகாசம் இருந்ததாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
பிரேரணை நிறைவேறுவதன் மூலம் இலங்கையில் நல்லிணக்கம் அமைதி, சமாதானம் என்பவற்றை ஏற்படுத்த முடியும் என அமெரிக்கா பிரேரணையை முன்வைத்து தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பிலான விவாதம் தொடங்கியது.
உலகத் தமிழ் மக்களின் எதிர்பார்புக்கு உள்ளாகியிருந்த இலங்கை தொடர்பிலான விவாதம் சற்று முன்னர் தொடங்கியது
விவாதத்தின்போது சபையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மகிந்த சமரசிங்க, மொகான் பீரிஸ் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இலங்கையின் விசேட தூதுவர் மகிந்த சமரசிங்க தமது தரப்பு வாதங்களை முன்வைத்து உரையாற்றுவதாகவும் தெரியவருகிறது.
அதேவேளை விவாதத்தைத் தொடர்ந்து பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தீர்மானம் 9 அதிகப்படியான வாக்குளால் நிறைவேறியது
ஜெனிவா ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையானது 9 அதிகப்படியான வாக்குகளினால் நிறைவேறியயது.
இப்பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா உட்பட்ட 24 நாடுகளும் எதிராக சீனா மற்றும் ரஸ்யா உட்பட்ட 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன.
மிகுதியான 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதரவளித்த நாடுகளின் பட்டியல்
ஆஸ்திரியா, பெல்ஜியம், பெனின், கம்ரூன், சிலி, கொஸ்தாரிகா, செக் குடியரசு, குவாத்தமாலா, ஹங்கேரி, இந்தியா, இத்தாலி,லிபியா, மொரிசியஸ், நைஜீரியா, பேரு, போலந்து, மால்டோவா, ரூமேனியா,ஸ்பெயின், சுவிஸ், அமெரிக்கா, உருகுவே
எதிராக வாக்களித்த நாடுகள்
பங்களாதேஸ், சீனா, கொங்கோ, கியூபா, ஈகுவடோர், இந்தோனேசியா, குவைத், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், கட்டார், ரஸ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து, உகண்டா, மௌரித்தானியா.
வாக்களிக்காத நாடுகள்
அங்கோலா, ஜோர்தான், கிர்கிஸ்தான், மலேசியா, செனிகல், புர்கினா பார்சோ, பொட்சுவானா, ஜிபூட்டி.
0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv