காரின் மின்சக்தி மூலம் பயன்படுத்த​க்கூடிய வெந்நீர் குடுவை

வீட்டில் கொதிக்க வைத்த நீரை ஆறாது சேமிப்பதற்கு வெந்நீர் குடுவையை பயன்படுத்துவது போன்று நீண்ட தூரப்பயணங்களின் போது கார்களில் இருந்து உற்பத்தியாக்கப்படும் மின்னில் இணைத்து நீரை சூடாக்கும் குடுவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
880 கிராம்களே ஆன இந்த மிகச்சிறிக குடுவையில் உள்ள நீரை வெப்பமேற்றுவதற்கு 12 வோல்ற் நேரோட்ட மின்சக்தி பயன்படுத்தப்படுகின்றது.
இதன் மூலம் இரண்டு நிமிடங்களில் 53 மில்லி லீட்டர் நீரை வெப்பப்படுத்த முடியும். நீரின் வெப்பநிலையை அறிந்து கொள்ளும் பொருட்டு வெப்பமானி ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேவையேற்படின் மின்னோட்டத்திலிருந்து துண்டிப்பதற்கான ஆளியும் காணப்படுகின்றது. இதன் பெறுமதி 149 யூரோக்கள் ஆகும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv