சைகை மொழி பேசும் சிம்பன்சி குரங்குகள் _

சிம்பன்சி குரங்குகள் சைகைகளால் பேசிக்கொள்ளும் என்பது தெரிந்ததே. ஆனால், எமக்குத் தெரிந்ததை விட இரண்டு மடங்கு அதிக எண்ணிக்கையில் சுமார் 66 வகையான மேனரிசங்களை அவை பயன்படுத்துகின்றன என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்திலுள்ள செயின்ட் அண்ட்ரூஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளன. உகண்டாவில் சிம்பன்சிகளுக்கான சரணாலயம் ஒன்று உள்ளது. இங்கு தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

தன் முதுகின் மீது ஏறிக் கொள்ளும்படி குட்டியிடம் சொல்வதற்கும் குட்டியின் கைகளைப் பிடித்துக் கொண்டு விளையாடக் கற்றுக் கொடுப்பதற்குமென வெவ்வேறு காரணங்களுக்கு வெவ்வேறு உடல் அசைவுகள், சைகைகளை அவை பயன்படுத்துகின்றன.

ஆனால், காடுகளில் வசிக்கும் சிம்பன்சிகள் மற்றக் குரங்குகளை வேட்டையாடுவதும் பெண் சிம்பன்சிகளை சிறை வைப்பதும், தங்களுக்குள்ளேயே குழு மோதல்களில் ஈடுபடுவதும் தற்போது தெரிய வந்துள்ளது. ___

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv