டிப்ஸ் கொடுக்கும் வழக்கம் அறிமுகமானது எப்படி

 ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு பில்லுக்குப் பணம் கொடுக்கும் போது பில் தொகைக்கு அதிகமாய் ஒரு சிறு தொகையை சேர்த்தே தட்டில் வைக்கிறோம். இந்த அதிகப்படியான தொகையை டிப்ஸ் என்று சொல்கிறோம். இந்த டிப்ஸ் என்ற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா? 


உண்மையில் இது டிப்(Tip) தான்.'To Insure Promptness' என்ற வாக்கியத்தின் முதலெழுத்துக்களின் கூட்டுத்தான் Tip. முற்காலத்தில் ஹோட்டல்களிலும் சத்திரங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு மிகத் துரிதமாய், மனம் கோணாமல் சேவை செய்ய பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாய் ஒரு பெட்டியில் 'To Insure Promptness' என எழுதி வைத்திருப்பர். வாடிக்கையாளர்களும் தமக்கு அளிக்கப்பட்ட சேவையைப் பாராட்டும் வகையில் அப்பெட்டியில் தாம் விரும்பும் சிறு தொகையைப் போட்டுவிட்டுப் போவார்கள்.

இப்படி போடப்படும் தொகை அங்கு பணி புரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சரி சமமாய் பகிர்ந்தளிக்கப்படுமாம்.

அவரவர் பணிக்கேற்ப டிப்ஸ் கொடுக்கப்படாது அனைவருக்கும் சமமாக வழங்கும் இப்பழக்கம் நாளடைவில் பணியாளரிடையே போதிய உற்சாகத்தைத் தரவில்லை. எப்படிப் பணி புரிந்தாலும் பொதுவன டிப்ஸ் பணம் வரத்தானே போகிறது என்ற எண்ணம் மேலோங்கியது. இந்நிலையில் வாடிக்கையாளர் தமக்குத் தேவைப்பட்ட பணிகளையெல்லாம் முகம் சுளிக்காமல் நன்றாய்ச் செய்த பணியாளருக்கு தாம் விரும்பும் டிப்ஸ் வழங்கும் வழக்கம் தொடங்கிற்று.

இப்போது அநேக இடங்களில் பணியாளருக்கு நேரிடையாய் டிப்ஸ் வழங்கும் வழக்கம் தான் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுகிறது. என்றாலும் பழைய முறைப்படி ஒட்டுமொத்தமாக சகலருக்கும் பொதுவாக ஒரு பெட்டிக்குள் டிப்ஸ் பணம் போடும் வழக்கமும் உள்ளது. ___

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv