இளவயது பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள்

இளவயது  பருவம் மனதை கட்டுக்குள் வைத்து கொள்ள முடியாத பருவம். இளவயது  பருவத்தில் நுழையும் போது பெண்களின் உடல் நிலையில் மட்டுமல்லாது மன நிலையிலும் பல மாற்றங்கள் ஏற்படும்.

வழக்கமான நடத்தையிலிருந்து வேறுபட்டு காணப்படுவார்கள். ஏதேனும் சிறு விஷயத்திற்கும் பெற்றோர்களிடம் அதிகமாக கோபப்படுவார்கள். அதிகமாக குடும்பத்துடன் எதிலும் கலந்து கொள்வதில்லை.  

இளவயது  வயதினரை கையாளுவதில் சில வழி முறைகள் உள்ளது.   இளவயது  பருவத்தில் நுழையும் போதே அவர்களுக்கான மன அழுத்தம் அதிகரிக்க ஆரம்பிக்கின்றது. இளவயது   பருவத்தில் வரக்கூடிய இடர்பாடுகளை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்களுடைய மன அழுத்தங்களை புரிந்து கொண்டு சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்து கொள்வதன் மூலமே தீர்வு காண மூடியும்.
இள  வயதினரிடம் அவர்களுடைய அன்றாட பிரச்சனைகளை கேள்வியாக எழுப்பி அவர்களிடமிருந்து பதில்களை பெற வேண்டும். அவர்களுடைய சூழ்நிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஆறுதல் தர வேண்டும்.
இளம்  பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், உடல் ரீதியான உணர்வுகள் குறித்தும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அவர்களுக்கு தோன்றக்கூடிய சந்தேகங்களுக்கு வெளிப்படையாக தீர்வு தர வேண்டும்.
தினமும் ஒரு கலந்துரையாடலுடன் அன்றைய நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம். இள வயதினரிடையே நீங்கள் நெருக்கம் காட்டாமல் விட்டால் மன அழுத்தம் ஏற்பட்டு பயம் ஏற்பட ஆரம்பித்து விடும்.
நீங்கள் ஏதேனும் வெளியிடங்களுக்கு செல்லும் போது இள  வயதினரையும் அழைத்து சொல்ல வேண்டும். அவ்வாறு வரவில்லையெனில், அவர்களுடன் கலந்தாலோசித்து, அவர்களின் மன அழுத்தங்களை புரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் இள வயதினரின் அன்றாட நிகழ்வுகளை அறிந்து அவர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv