இன்று ஒரு புதிய நாள் நீங்கள் அதில் என்ன தருகிறீர்களோ அதையே பெறுவீர்கள்..சிந்தனைத்துளிகள்


நாகரிகம் அழிந்துவிடவில்லை, அணு யுத்தத்தின் பின்னரும் உலகம் செழிப்பாகவே வளர்ந்துள்ளது.
01. விழித்திருக்கும் நேரமெல்லாம் வளர்ச்சிக்கான நேரம் என்பதை அறிந்து, உயர்வுக்கு வித்திட வேண்டும். சிதிலமடைந்து போன வாழ்க்கையை சீர்படுத்த அந்த நேரத்தை நல்லதோர் ஆயுதமாக மாற்ற வேண்டும்.

02. தவற விட்ட வாழ்க்கையைத் தேடி திசைகளை துழாவுவதைவிட்டு, இனி வரும் நாட்கள் ஒளியுடையதாக அமைய பாடுபட வேண்டும்.
03. வாழ்க்கையை வீணடிக்க நேரமில்லை ஏனென்றால் பிறக்கும்போதே இறப்பிற்கான கவுண்ட் டவுண் ஆரம்பித்துவிடுகிறது.
04. நேற்றைய இருளில் இருந்து விடுபட்டு, இன்றைய வெளிச்சத்தில் நடந்தால், நாளைய நட்சத்திரங்களாக ஜொலிக்கலாம்.
05. வளர்ச்சிக்கான விதைகளை நம்மிடமே வைத்துக் கொண்டு, அது தெரியாமல் பாசத்தைத் தேடி பள்ளங்களிலும், வெளிச்சத்தைத் தேடி வீதிகளிலும், விதைகளைத் தேடி பாலைவனங்களிலும் அலைந்து கொண்டிருக்கிறோம்.
06. நம்பிக்கையுடன் நடந்தால் கடலும் வழிவிட்டு வாழ்த்தும். நேசத்துடன் பார்த்தால் கல்லும் நெகிழ்ந்துருகும், கோபத்துடன் கையாண்டால் பனியும் நெருப்பாகும். இறுக்கத்துடன் பற்றினால் பனியும் சருகாகும்.
07. நட்புடன் நடவுங்கள் மிருகம் கூட கை கொடுக்கும், பயத்துடன் ஓடுங்கள் புழுவும் வாளெடுக்கும்.
08. வார்த்தைகளை அவதானமாக பேசுங்கள். பொருளறிந்து கூறினாலும், பொருளறியாமல் கூறினாலும் எந்த வார்த்தை எதைச் சுட்டுகிறதோ அது நடந்தே தீரும்.
09. வார்த்தைகளை சொல்லும்போது உணர்ச்சியுடன் சொல்லுங்கள் அப்போதுதான் அது எய்யப்பட்ட அம்புபோல இலக்கை தாக்கும்.
10. வார்த்தைகள் விதைகள், எண்ணங்கள் மொட்டுக்கள், செயல்கள் கனிகள். வார்த்தைகளில் சுவையுண்டு, வெப்பமுண்டு, திரட்சியுண்டு, வேகமுண்டு, மருந்துண்டு, நஞ்சுமுண்டு.
11. அன்பான வார்த்தைகள் தன்னம்பிக்கையை கொடுக்கும், அறுதலான வார்த்தைகளால் தற்கொலையையும் தவிர்க்கலாம்.
12. இனிமையான வார்த்தைகள் நற்சூழலை வளர்க்கும், எழுச்சியான வார்த்தைகள் வெற்றியைத் தரும். ஊக்கமான வார்த்தைகள் சோகத்தை விரட்டும். கனிவான வார்த்தைகள் உயிரையே காப்பாற்றும்.
13. காலமறிந்து சொன்ன வார்த்தைகள் கஷ்டத்தைத் தவிர்க்கும். தன்னம்பிக்கை வார்த்தைகள் மனச்சோர்வை விரட்டும்.
14. தன்மையான வார்த்தைகள் மனச்சலிப்பை நீக்கும். நகைச்சுவையான வார்த்தைகள் இறுக்கத்தை; தளர்த்தும்.
15. ஒரு யுத்தத்தை வார்த்தைகளால் தொடங்க முடியும். அதுபோல வார்த்தைகளால் சமாதானத்தையும் உருவாக்கவும் முடியும்.
16. வாழ்வின் எல்லாச் சூழலிலும் நம்மை இணக்கமாக வைத்திருப்பது வார்த்தைகளே. வார்த்தைகளை நாம் கட்டுப்படுத்தினால், வாழ்வின் வெற்றிகரமான இணக்கம் நிலவும்.
17. காற்று ஓய்ந்ததும் கடல் அமைதியாகும், ஆசைகள் ஓய்ந்ததும் நாம் அமைதியாவோம்.
18. மிகச்சிறந்ததை எதிர்பாருங்கள், அது கடந்த காலத்தில் இல்லை கடவுள் நல்ல மதுவை இறுதியில்தான் வைத்திருப்பார்.
19. வாழ்வை எண்ணத்தாலும் செயலாலும் அளக்கலாம் காலத்தால் அல்ல. கடைசியில் சந்தோஷமான திருப்தியான இதயத்தை கடவுளிடம் ஒப்படைக்க வேண்டும்.
20. ஒவ்வொரு பெரிய போராட்டம் அல்லது விபத்திலிருந்து ஒரு புதிய விடியல், வாழ்வின் உயிரின் மறுபிறப்பு தோன்றி, முன்னேற்றத்தின் சக்தி வாய்ந்த அலை மனிதனை மேலும் மேலும் உயர்த்தி வருகிறது.
21. கதவுகள் மூடப்படவில்லை, முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை கிடையாது. நாமே செய்வது போலத்தான் எதிர்காலம் இருக்கும். புதிய யுகத்தை படைக்கும் ஆரம்பக் கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
22. சரித்திரத்தின் மிகவும் சவாலான வாய்ப்பு நம்முன்னே இருக்கிறது. அனைவரும் சோகங்களை விடுத்து உற்சாகமாக வேண்டும்.
23. முன்னேற்றம் இயற்கையின் விதி, அது நீண்ட அலைகளாக செல்கிறது. ஆனால் அது ஒரு நேர்கோட்டில் செல்ல வேண்டிய அவசியமில்லை. சிலவேளை பின்னடைவுகள் வரும் ஆனால் இறுதியில் புவி ஒரு குலுங்கு குலுங்கி அதைச் சரி செய்து கொண்டு உருளும்.
24. நினைவுபடுத்திக் கொள்ளுங்கள், வாழ்வில் எல்லாமே சுமுகமாக இருந்துவிடாது. சிலவேளை அடிதலையாக விழவும் கூடும், ஆனால் நாகரிகத்தின் இயல்பே எப்போதும் மேல் நோக்கி இருப்பதுதான்.
25. இந்த நாளைப்பற்றி அறிவுபூர்வமாக நீங்கள் ஆராய்ந்ததில்லை ஆகையால்தான் இந்த நாளைவிட கடந்த காலம் மேலானது என்று கருதுகிறீர்கள்.
26. ஆக்கபூர்வமாக சிந்திக்கும் வலிமை இல்லாத காரணத்தால்தான் ஆக்கபூர்வமான அணு சக்தியை மனிதன் அணு குண்டாக மாற்றியிருக்கிறான்.
27. உலகம் பற்றிய அதிக அறிவு பெறுவதுதான் எதிர்காலத்திற்கு நல்லது. ஆனால் அதிக அறிவு மட்டும் போதாது அதற்கேற்ப அன்பும் வேண்டும்.
28. இருண்ட இறுகிய முகமுடைய அவநம்பிக்கை மிக்க காலம் முடிந்துவிட்டது என்று கருதுங்கள்.
29. இதுவரை உலகில் உருவாக்கப்பட்ட அனைத்து சக்திகளிலும் உயர்ந்த சக்தி நம்பிக்கையே.
30. மனித குலத்திலும், கடவுளின் நோக்கங்களிலும் நம்பிக்கை இழக்காதே.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv