மன்னார் மாவட்ட இளைஞர்களின் கூட்டு முயற்சியினால் பட்டாசு குறும் திரைப்படம்

மன்னார் மாவட்ட இளைஞர்களின் கூட்டு முயற்சியினால் பட்டாசு என்ற குறும் திரைப்படம் ஒன்று உருவாக்கப்ட்டு கடந்த சனிக்கிழமை மன்னார் சித்தி விநாயகர் இந்து கல்லூரியில் வெளியிடப்பட்டது. 
திரைக்கதை ஒளிப்பதிவு எடிட்டிங் என மிகச் சிறப்பாக செய்திருக்கின்றார்கள். யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் வடகிழக்கு இளைஞர்கள் பலரும் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பட்டாசு குறும்படத்தை இயக்கியவர் டி. ஸமிதன் ஆகும். பட்டாசு திரைப்படத்தில் நடித்ததுடன் மட்டுமன்றி தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார் சுகிர்தன். ஒளிப்பதிவு, ஒளிக்கலவை, அத்துடன் தயாரிப்பிலும் பார்த்திபன் ஈடுபட்டுள்ளார். இவர்கள் மூவருடன் மன்னார் மாவட்டத்ததைச் சேர்ந்த பல இளைஞர்களும் படம் வெளி வர உழைத்திருக்கின்றார்கள்.

மேலும் ---காணொளி 

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv